சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜேக்சன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 2 பொயிண்ட் ஓ படத்தின் முன்னோட்டம் ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓஸ்கர் விருதுப் பெற்ற ஒலிப்பதிவாளரான ரசூல் பூக்குட்டி தன்னுடைய டுவிட்டரில் ஓகஸ்ட் 15 ஆம் திகதி இந்திய சுதந்திரத்தன்று அனைவரும் எதிர்பார்க்கும் படத்தின் முன்னோட்டம் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார்.

இது சுப்பர் ஸ்டார் நடிப்பில் ஷங்கர் இயக்கிய “2 பொயிண்ட் ஓ ”படத்தைத்தான் குறிப்பிடுகிறது என்று ரசிகர்கள் கருதிக் கொண்டு, இந்த செய்தியை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.