வவுனியாவில் இளைஞர் ஒருவரை அழைத்துச் சென்று கட்டி வைத்து தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கொக்குவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவரை கடந்த புதன் கிழமை மதியம் சிலர் அழைத்துச் சென்றுள்ளனர்.  

அழைத்துச் சென்றவர்கள் குறித்த இளைஞனை கட்டி வைத்து தாக்கிய பின்னர் மறுநாள் வியாழக் கிழமை மாலை கொக்குவெளிப் பிரதேசத்தில் கொண்டு சென்று விட்டுள்ளனர். 

உடல் முழுவதும் காயங்களுடன் உறவினர்களால் மீட்கப்பட்ட இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.