உலகிலேயே மிகவும் வயதான பெண்மணியான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியோகோ தனது 117 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

மியாகோ 1901 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் பிறந்தார். கடந்த ஏப்ரல் மாதம் உலகின் வயதான பெண்மணியான  நபரான நமி டாஜிமா உயிரிழந்த பின்னர், மியாகோ உலகின் வயதான பெண்மணியாக அறிவிக்கப்பட்டார்.

இவரது மரணம் குறித்து அவரின் குடும்பஸ்தார் கூறும்போது 

சியோ மியோகோவின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினர், அவர் எங்களுக்கு தெய்வம், பிறருடன் அன்பாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்வார். அவர் ஒரு பரப்பரபான நபராகவே இருந்தார். அவர் மிகுந்த சுவையான உணவுகளையே அதிகம் உண்பார் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் உலகின் உலகின் வயதான பெண்மணியாக சியோ மியோகோவை கின்னஸ் அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்க இருந்த நிலையில் மியாகோ கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்திருக்கிறார்.

இருப்பினும் அவரது மரணம் தொடர்பான உத்தியோக அறிவிப்பினை அவரது சொந்த ஊர் அமைந்துள்ள கனகவா மாகாண அரசு இன்று உறுதிப்படுத்தியுள்ளது.