"வட மாகாண தேர்தலை முதலில் நடத்துவதா? என்பதனை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும்"

Published By: Digital Desk 7

27 Jul, 2018 | 03:42 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

ஜயம்பதியும், சுமந்திரனும் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து செல்வது உண்மையாகும். பிரதமரினதும், வழிநடத்தல் குழுவினதும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே அவ்விருவரும் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதில் தவறுகள் ஏதும் இல்லை" என பாராளுமன்ற சபை முதல்வரும் அரச தொழில் முயற்சி அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயம்பதி விக்ரமரத்ன எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வினவிய போதே அவர் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புதிய அரசியலமைப்பினை ஜயம்பதி விக்கிரமரத்ன, எம்.ஏ சுமந்திரன் மாத்திரம் நிறைவேற்ற போவதில்லை. புதிய அரசியலமைப்பொன்று வருமானால் அதனை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். அதன்பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும். அதன்போது மக்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய அரசியலமைப்பில் என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதனை கண்டுக்கொள்ள முடியும்.  

அதனை விடுத்து ஜயம்பதியும், சுமந்திரனும் மாத்திரமா புதிய அரசியலமைப்பினை நிறைவேற்ற போகின்றனர். அவ்வாறு நடக்காது. ஜனநாயக முறைமையின் பிரகாரமே அனைத்து காரியங்களையும் முன்னெடுப்போம்.

ஜயம்பதி விக்கிரமரத்னவும், எம்.ஏ சுமந்திரனும் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து செல்வது உண்மையாகும். பிரதமரினதும் வழிநடத்தல் குழுவினதும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே அவ்விருவரும் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதில் தவறுகள் ஏதும் இல்லை. 

ஜயம்பதியும், சுமந்திரனும் அரசியலமைப்பினை தயாரித்தமைக்காக அவர்களின் ஒப்புதலை மாத்திரம் அரசாங்கம் பெறாது. ஆகவே யாரும் குழப்பம் கொள்ள தேவையில்லை. எதிரணியினர் இவ்வாறான கருத்துகளை கூறி மக்களின் கவனத்தை திசைத்திருப்ப பார்கின்றனர். மக்களின் கவனத்தை திசைத்திருப்ப முட்டாள் தனமாக செயற்பட்டு வருகின்றனர்.

அத்துடன் வட மாகாணத்திற்கு முதலில் தேர்தல் நடத்த வேண்டும் கூட்டு எதிர்க்கட்சி கோருகின்றன. வடக்கிற்கு மாத்திரம் தனியாக தேர்தல் நடத்த முடியாது. அனைத்து மாகாணங்களையும் ஒன்றிணைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந் நிலையில் வட மாகாணத்தற்கு மாத்திரம் தனியாக தேர்தல் நடத்த முடியாது. எனினும் வட மாகாண தேர்தலை முதலில் நடத்துவதா? என்பதனை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும். அரசாங்கத்தினால் அது தொடர்பில் தீர்மானிக்க முடியாது" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04