நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் வெஞ்சர் லோவர் லோறன்ஸ் பகுதியில், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் கெசல்கமுவ ஓயாவில் இன்று மதியம் 2 மணியளவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பொது மக்கள் வழங்கிய தகவலின் அடுத்தே இச்சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்ட இச்சடலத்தை மரண விசாரணையின் பின் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ - லெட்சுமி, மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சின்னயப்பன் நிரஞ்சன் என்ற குடும்பஸ்தர் ஒருவர் கடந்த நான்கு தினங்களுக்கு முன் காணாமல் போய் உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட குறித்த சடலம் காணாமல் போனதாக கருதப்படும் குடும்பஸ்தர் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த குடும்பஸ்தர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு நீர் தேக்கத்தில் எறியப்பட்டுள்ளாரா? என்பது தொடர்பாக பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரைணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.