விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கைது மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவே உயர் நீதிமன்றில் யோஷித்த ராஜபக்ஷ அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.