முக்கிய திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு 3, 4, 5, 7 மற்றும் 8 ஆகிய பகுதிகளில் இன்று மின்சாரத் தடை ஏற்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் இடைக்கிடையில் மின்சாரத் தடை ஏற்படுத்தப்படும் என்று  நேற்று அறிவிக்கப்பட்டிருந்த போதும் இத் தீர்மானம் மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் நாளை  குறித்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் இடைக்கிடையில் மின்சாரத் தடை ஏற்படுத்தப்படும் எனவும் மின்சார சபை அறிவித்துள்ளது.