பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரஹெட்டிய பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் 57 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே குறித்த  விபத்து நிகழ்ந்துள்ளதுடன் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.