இயற்­கையின் மித­மிஞ்­சிய கோர­தாண்­ட­வத்­திற்கு அப்பால் உல­க­ளவில் பீதியை தரக் கூடிய ஒரு வகை கொடிய நோயாக புற்று நோய் உரு­வெ­டுத்­துள்­ளது. ஆரம்ப  காலங்­களில்  அத்­தி ­பூத்தாட் போல ஆங்­காங்கு பரவி வந்த புற்று நோயா­னது அண்­மைக்­கா­ல­மாக வயது வித்­தி­யா­ச­மின்றி பரம்பரை பரம்ப­ரை­யற்ற பல புற்­று­நோய்கள் உரு­வாகி விட்டன.

உலக வாய்ப்­புற்று நோய் தினம் ஜூலை 27ஆம் திக­தியை முன்­னிட்டு எழு­தப்­பட்டுள்ள இந்த கட்­டுரை இலங்­கையின் வாய்ப்­புற்று நோயின் நிலை­வரம் குறித்து ஆராய்­கி­றது. 

புற்று நோயா­னது  மார்­பக புற்­றுநோய், வாய்க்­குழி புற்று நோய், கருப்பை புற்று நோய், நுரை­யீரல் புற்று நோய், வாய்ப்­புற்று நோய், தொண்டை புற்று நோய், இரத்த புற்று நோய் உள்­ளிட்ட பல பெயர்­களில் இன்று மக்­க­ளி­டையே பேரா­பத்தை ஏற்­ப­டுத்தி வரு­கின்றது. 

இதில் இரத்த புற்று நோய் பரம்­பரை பரம்­ப­ரை­யாக பரவ கூடி­ய­தா­யினும் தற்­போது வல்­ல­ரசு நாடு­களின் விஞ்­ஞான ஆய்­வு­க­ளூ­டாக அவற்றை முறி­ய­டிப்­ப­தற்­கான செயற்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. ஆனால் ஏனைய வகை  புற்று நோய்­களும் பரம்­பரை பரம்­ப­ரை­யாக தொடரக் கூடி­யதா என்ற அச்சம் இன்று வரை மக்கள் மத்­தியில் நில­விய வண்­ணமே உள்­ளன. 

இரத்த புற்று நோய் அல்­லாத ஏனைய புற்று நோய்கள் பரம்­பரை வியாதி அல்­லாத போதிலும் நூற்­றுக்கு 2 அல்­லது 5 வீதம் பரவ க்கூடிய வாய்ப்­புக்கள் உள்­ளன. எனவே பாதிக்­கப்­பட்­டவர் பெற்றுக் கொள்ளும் சிகிச்சை, உடல் ஆரோக்­கியம் போன்ற விட­யங்­களில் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும். 

இலங்­கையில் வாய்­ப்புற்று நோயினால் நாளொன்­றுக்கு ஆறு புற்று நோயா­ளர்கள் அடை­யாளம் காணப்­படும் அதே­வேளை நாளொன்­றுக்கு மூன்று பேர் பலி­யா­கின்­றனர். இவ்­வாறு பாதிக்­கப்­ப­டு­ப­வர்­களில் நகர்­ப்புற சமூ­கத்­தி­னரை காட்­டிலும் கிரா­மப்­புற மக்­களே அதி­க­ளவில் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்.

இலங்­கையில் வய­தான பிரி­வி­ன­ரி­டையே புகை­யற்ற புகை­யிலை பாவனை தொன்று தொட்டு கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. குறிப்­பாக கிரா­ம­ப்புற மக்கள் மத்­தியில் இது ஒரு பொழுது போக்­கான விட­ய­மாக புகை­யிலை பாவ­னை­யுள்­ளது.

அதற்­கி­ணங்க இலங்­கையின் சப்­ர­க­முவ மாகா­ணத்தில் கிரா­மப்­புற மக்­க­ளி­டையே  77 சத­வீ­த­மான மக்கள் மத்­தியில் வாய்ப்­புற்று நோய் தொடர்பில் போதிய விழிப்­பு­ணர்வு இல்லை என கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அதே­ச­மயம் 76 சத­வீ­த­மான  மக்கள் பாக்கு, புகை­யிலை பாவ­னையால் வாய்ப்­புற்று நோய்க்கு ஆளா­கின்­றனர். 

இன்­றைய இளை­ஞர்கள் புகை­யி­லையை வேறு வடிவில் பகி­டிக்­காக உப­யோ­கிப்­ப­தாக கூறி கடை­சியில் அதற்கு அடி­மை­யாகி வரு­கின்­றதை  அவ­தா­னிக்க கூடி­ய­தா­க­வுள்­ளது. அதா­வது மது, சிகரெட், பீடி, மற்றும் குப்­பிகள், பக்­கற்­று­களில்  அடைக்­கப்­பட்ட ஒரு­வகை பாக்கு  வகை­க­ளையும் பொழுது போக்­காக புகை­யிலை, சுண்­ணாம்பு கலந்த வெற்­றி­லையும் இளைய சமூ­கத்­தினர் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். இந்த பழக்­க­வ­ழக்­கங்கள் தொடர்ச்­சி­யாக கடைப்­பி­டிக்­கப்­படும் பட்­சத்தில் வாய்ப்புற்­றுநோய் உரு­வா­கக்­கூடும். அதே சமயம் யாரொ­ருவர் சிகரெட், மது­பானம் மற்றும் புகை­யற்ற புகை­யிலை பாவ­னையை தொடர்ச்­சி­யாக கொண்­டுள்­ளாரோ அவ­ருக்கு நிச்சயம் 100 சத­வீத புற்று நோய் ஏற்­ப­டக்­கூடும். 

நீண்ட கால புகை­யிலை பாவனை  வாய் புற்­றுநோய் உரு­வா­க ­வ­ழி­ வ­குக்கும்.

இலங்­கையில் வாய்ப்­புற்று நோயினால் ஆண்கள் அதி­க­ளவில் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். இதற்கு போதை வஸ்து, மது­பா­வனை, புகைத்தல், புகை­யிலை போன்ற பழக்­க­வ­ழக்­கங்­களே கார­ண­மாகும்.  அதே­ச­மயம் மார்­பக, கருப்பை புற்று நோயினால் பெண்கள் அதி­க­ளவு பாதிக்­கப்­ப­டு­வதும் குறிப்­பி­டத்­தக்­கது. 

அமெ­ரிக்கா, அவுஸ்தி­ரே­லியா  போன்ற வல்­ல­ரசு நாடு­களில் பெண்கள் மது அருந்­துதல், புகைத்தல், போன்­ற­வற்றால் வாய்ப்­புற்று நோய்க்கு ஆளா­கின்­றனர். ஆனால் இலங்­கையில் பெண்கள் வாய்ப்­புற்று நோயினால் அதி­க­ளவு பாதிக்­கப்­ப­டாத போதிலும் புகை­யற்ற புகை­யிலை பாவ­னை­யாலும் மூக்குப் பொடி, பாவ­னை­யாலும் வாய்ப்­புற்று நோய்க்கு ஆளா­கின்­றனர். 

உல­க­ளா­விய ரீதியில் 80 சத­வீ­த­மான புற்­று­ நோ­யா­ளர்கள் மேற்­கண்ட கார­ணங்­க­ளா­லேயே வாய்ப்­புற்று நோய்க்கு ஆளா­கி­யுள்­ளனர். புகை­யிலை பாவனை எனும் போது புகை­யி­லை­யு­டனோ அல்­லது வெறும் வெற்­றி­லை­யையோ  மெல்­லு­வதும் புகை­யிலை, பாக்கு  சேர்ந்த கல­வை­களை ் தொடர்ச்­சி­யாக பயன்­ப­டுத்­து­வ­தாலும் வாய்ப்­புற்று நோய்க்கு உட்படுகின்றனர்.

தொற்­றாத நோய்­க­ளுக்­கான ஆபத்து கார­ணிகள் தொடர்பில் 2015ஆம் ஆண்டு இலங்­கையில்  மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வொன்றில் 18 வய­திற்கும் 69 வய­திற்கும் இடைப்­பட்­டோரில் கால் வாசிக்கும் மேலான 26 சத­வீத ஆண்­களும், 5  சத­வீத பெண்­களும் புகை­யற்ற புகை­யிலை பாவ­னைக்கு அடி­மை­யா­கி­யுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

வாய்­ப்புற்று நோய் தொடர்பில் மஹ­ர­கம வாய்­வழி  சுகா­தார  சமூக வைத்­திய நிலை­யத்தின் ஆலோ­ச­கரும் வைத்­தி­ய­ரு­மான ஹேமந்த அம­ர­சிங்­கவை தொடர்பு கொண்­ட­போது பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார். 

வாய்ப்புற்று நோயா­னது  உதடு, தொண்டை, வாய்­க்குழி, நாக்கு உள்­ளிட்ட பகு­தி­களில் ஏற்­படக் கூடிய ஒரு­வகை செதில் கல புற்று நோய் என வரை­ய­றுக்­கப்­ப­டு­கின்­றது.  இதற்கு பிர­தான காரணம் புகை­யிலை பாவ­னை­யாகும். இதனால் நுரையீரல். வாய், உணவுக்குழாய் என்­பன பாதிக்­கப்­பட்டு வாய்ப்­புற்று நோய் ஏற்­ப­டு­கின்­றது. 2010ஆம் ஆண்­டுக்­கான  புற்று நோய் சம்­பவ தர­வு­களின் பிர­காரம் 14.3 வீத­மான புற்று நோய் உதடு, வாய்க்­குழி, தொண்டை உள்­ளிட்ட பகு­தி­களில் ஏற்­ப­டு­ப­வை­யென அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக இவை பெண்­களை காட்­டிலும் ஆண்கள் மத்­தி­யி­லேயே பொது­வாக காணப்­படக் கூடிய புற்­று­நோ­யாகும். 

அதே ஆண்டில் வெளியி­டப்­பட்ட மற்­றொரு ஆய்­விலும்  24 வீத­மான புற்று நோய் உதடு, வாய்க்­குழி, தொண்டை உள்­ளிட்ட பகு­தி­களில் ஏற்­ப­டு­ப­வை­யென அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளது. 

இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்ட தேசிய சுகா­தார பதி­வக தக­வல்­க­ளின்­படி 2001 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­தி­களில் சுமார் 10 வகை­யான புற்­றுநோய் வகைகள் கண்­ட­றி­யப்­பட்­டன. இவை மொத்த மக்கள் தொகையில் 12.8 வீத­மாகும். 

அந்த வகையில் வாய்ப்­புற்று நோயினால்  2011ஆம் ஆண்டு 2065 ஆண்­களும், 493 பெண்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தோடு நாளொன்­றுக்கு 7 பேர் வீதம் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். 2013 ஆம் ஆண்டு 863 ஆண்­களும், 289 பெண்­களும் அடை­யாளம் காணப்­பட்ட அதே­வேளை  நாளொன்­றுக்கு 3 பேர் வீதம் பலி­யா­கி­யுள்­ளனர். 2014ஆம் ஆண்டு 2353 ஆண்­களும், 619 பெண்­களும் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தோடு நாளொன்­றுக்கு 8 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டினார். 

எவ்வித உடல்நோவுமின்றி ஏற்படக்கூடிய இத்தகைய வாய்ப் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சைகளை மேற்கொள்வதனூடாக பாதிக்கப்பட்ட தரப்பினரை காப்பாற்றலாம். இதன் அறிகுறிகளாக  வெடித்த உதடுகள், நாக்கு மற்றும் பற்கள் தேய்மானமடைதல், வாய் மற்றும் பற்களில் நிறமாற்றம், போன்றவற்றை குறிப்பிடலாம். 

எனவே புகையிலை, புகைத்தல், போதை பொருள் பாவனை உள்ளிட்ட தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடுவதன் ஊடாக  வாய்ப் புற்று நோயிலிருந்து முற்றாக விடுபட முடியும். அதேபோல பாதிக்கப்பட்ட நோயாளிகள்  ஆரம்ப கட்டத்திலேயே  கண்டறிந்து உரிய சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதன் ஊடாக உயிராபத்திலிருந்து மீண்டு வரலாம். 

(அ.நிவேதா)