பேராதனை பல்கலைக்கழகம் இன்று முதல் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக பல்கலைக்கழக உப வேந்தர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் நீடித்துள்ள குழப்ப நிலை காரணமாகவே எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரும் வரையில் மூடப்படவுள்ளது.

அத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6 மணிக்கு முன்னர் பல்கலைக்கழாக வளாகங்களிலிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.