லீப் வருடத்தில் பிறந்த பெண் ஒருவர் தனது 100 ஆவது வயதை கடந்து அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

எனினும் லீப் வருட அடிப்படையில் தனது 25 ஆவது வயதினையே கடந்துள்ளார்.

டெஸ்யி பெல்லி வோட் என்ற மூதாட்டி 1916 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி பிறந்துள்ளார்.

டெஸ்யி பெல்லி வோடின் மகன் கிளின்ட் வோட் இது குறித்து தெரிவிகையில், தனது குடும்பத்தில் சக்திமிக்க பெண்மணி 100 ஆவது வயதினை தாண்டியது எங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எனக்கு தற்போது 81 வயதாகிறது. நானும் 100 வயதுவரை வாழ ஆசைப்படுகின்றேன். அவ்வயதினில் என் தாயின் மனநிலையில் இருக்க ஆசிக்கின்றேன்.