(எம்.சி.நஜிமுதீன்)

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் தேசிய சொத்துகளை விற்பனை செய்து வருகிறது. அதன் வரிசையில் கட்டுநாயக்க விமான நிலையத்தையும் தனியார் மயப்படுத்துவதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது என டி.வி.சானக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் தேசிய சொத்துகளை விற்பனை செய்வதிலேயே அக்கறை காட்டி வருகிறது. அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தளை விமான நிலையம், பாலாலி விமான நிலையம், கட்டுநாயக்க விமான நிலையம் என சகலவிதமான தேசிய சொத்துகளையும் விற்பனை செய்வதற்கே நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கே இவ்வாறு தேசிய சொத்துகளை விற்பனை செய்வதாக அரசாங்கம் குறிப்பிட்டது. எனினும் விற்பனை செய்வதன் மூலம் கிடைத்த பணத்தைக்கொண்டு கடன் செலுத்தவில்லை. இந்தியாவை சமாதனப்டுத்துவதற்கே மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்குவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

எனவே ஒவ்வொரு நாட்டையும் சமாதானப்படுத்துவதற்கு தேசிய வளங்களை தாரை வார்ப்பதென்றால் எமது எதிர்கால சந்ததியினருக்கு எதுவுமே எஞ்சாது போய்விடும் என்றார்.