இரு ஆண்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்ணுக்கு உதவுவதாக கூறி மூன்றாவதாக மற்றொரு ஆண்ணொருவரினால் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இத்தாலியின்  நேபிள்ஸ் பகுதியில் இரவு நேர கேளிக்கை விடுதியிலிருந்து வீதியில் சென்று கொண்டிருந்த, பிரித்தானியாவை சேர்ந்த 18 வயதுடைய பெண் இரு நபர்களால் காருக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் காரிலிருந்து வெளியில் தூக்கி வீசப்பட்ட குறித்த பெண்ணுக்கு உதவி செய்வதாக கூறி அழைத்து சென்ற மூன்றாவது நபர், விடுதி அறைக்கு அழைத்து சென்று மீண்டும் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மூன்று நபர்கள் மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடுக்கப்பட்டது.

இதனையடுத்து கைது செய்யப்பட்டிருந்த மூன்று பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் அனுமதியுடனே தவறு நடந்ததாக நீதிமன்றத்தில் குற்றவாளிகள் கூறினார். பின்னர் இதனை விசாரித்த நீதிபதி மூன்று பேரையும் பிணையில் விடுவித்துள்ளார்.