ஐபோன்களுக்கான வட்ஸ் அப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்படவுள்ளது.குறித்த பதிப்பில் இதுவரை இல்லாத புதிய வசதி ஒன்று உள்ளடக்கப்படவுள்ளது.

அதாவது அப்பிள் தொலைபேசிகளில் உள்ள சிறி  வசதியை பயன்படுத்தி வட்ஸ் அப்  ஊடாக குழுக்களுக்கிடையே குறுஞ்செய்தி அனுப்ப முடியும்.

இதற்கு கூகுள் சிறியினை செயற்படுத்தி Send Message என்பதை தெரிவு செய்து வட்ஸ் அப் குழுவின் பெயரை தெரிவித்தல் வேண்டும்.

இவை அனைத்தும் குரல் வழி கட்டளைகளாகவே உள்ளீடு செய்யப்படும்.