கல்லூரி மாணவிகளை உல்லாசமாக இருக்க அழைத்ததாக விடுதி உரிமையாளர் மீது தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குறித்த விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன் திடீரென மரணமடைந்துள்ளார். 

குறித்த உரிமையாளரின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை பீளமேடு பாலரங்கநாதபுரத்தில் அமைந்துள்ள மகளிர் விடுதி ஒன்றில் கல்லூரி மாணவிகள், வேலை செய்யும் இளம் பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். 

இவர்களை விடுதி உரிமையாளர் ஜெகந்நாதனும், விடுதி காப்பாளர் புனிதாவும் பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள இருவரையும் பொலிஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

இந்நிலையில் ஆலங்குளத்தில் உள்ள ஒரு கிணற்றில் ஜெகந்நாதன் சடலமாக மீட்கப்பட்டார். அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இவருக்கு பின்னால் இயங்கும் முக்கிய புள்ளிகள் யாரேனும் தமது பாதுகாப்பிற்காக இவரை கொலை செய்துவிட்டு கிணற்றில் வீசிவிட்டனரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்