இங்­கி­லாந்து அணி 1000ஆவது டெஸ்டில் கள­மி­றங்கக் காத்­தி­ருக்­கின்­றது. இந்­தி­யா­வுக்கு எதி­ரான முதல் டெஸ்டில் இச் சாத­னையை எட்­ட­வுள்­ளது.

இங்­கி­லாந்து கிரிக்கெட் அணிக்கு 1877ஆம் ஆண்டு டெஸ்ட் அந்­தஸ்து கிடைத்­தது. அதே ஆண்டில் முதல் டெஸ்டில் கள­மி­றங்­கி­யது இங்­கி­லாந்து. 

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான இப்­போட்டி மெல்­போர்னில் நடை­பெற்­றது. இது­வரை 999 டெஸ்ட் போட்

டிகளில் இங்கிலாந்து பங்­கேற்­றுள்­ளது. 

இதில் 357 போட்­டி­களில் வெற் றியும் (35.73 சத­வீதம்) 297 போட்­டி­களில் தோல்வியும் கண்ட இங்­கி­லாந்து 345 போட்­டி­களை சம­நி­லையில் முடித்­துள்­ளது. 

அதி­க­பட்­ச­மாக அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக 346 டெஸ்ட்களில் பங்­கேற்­றது. எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி பர்­மிங்­ஹாமில் இந்­தி­யா­வுக்கு எதி­ராக கள­மி­றங்­க­வுள்ள இங்­கி­லாந்து 1000 டெஸ்ட்களில் பங்­கேற்ற முதல் அணி என்ற சாதனையைப் படைக்­க­வுள்­ளது.

இரண்­டா­வது இடத்தில் ஆஸி. (812 டெஸ்ட்) உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் (530) மூன்றாவது இடத்தில் உள்ளது.