பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரிக் -இ- இன்சாப் கட்சி 113 தொகுதிகளை கைப்பற்றி முன்னிலையில் உள்ள நிலையில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக முஸ்லிம் லிக் கட்சியினர் தெரிவித்துள்ளமையினால் தேர்தல் ஆணையக இணையத்தள பக்கம் முடக்கப்பட்டுள்ளது. 

272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத் தேர்தல் நேற்றைய தினம் ஆரம்பமானது இதில் தனிப்பெரும்பான்மை பெற 137 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். இந் நிலையில் தெஹ்ரிக் இன்சாப் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இம்ரான் கான் 113 தொகுதிகளை கைப்பற்றி முன்னிலையில் உள்ளார். 

இந் நிலையில் பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கானுக்கு ஆதரவாக தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதாவது இம்ரான் கானுக்கு அந்நாட்டு இராணுவம் ஆதரவு அளிக்கிறது. இதனால் இராணுவத்தின் உதவியுடன் அவர் வெற்றி பெற்று இருக்கிறார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. அமெரிக்காவும் இந்த புகாரை வைத்து இருக்கிறது.

மேலும் பாகிஸ்தானின் உளவுத்துறை, ஐ.எஸ்.ஐ. இம்ரான் கானின் வெற்றிக்கு பின் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறியுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது பாகிஸ்தானின் தேர்தல் ஆணையக இணையத்தள பக்கம் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.