பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப டும் பெண்கள், அவர்­க­ளுக்கு ஏற்­படும் கடும் அதிர்ச்சி கார­ண­மாக அந்த சம்­ப­வத்தால் கர்ப்­பந்­த­ரிக்க முடி­யாது என கருத்து வெளி­யிட்டு அமெ­ரிக்க இடாஹோ பிராந்­திய செனட்­சபை உறுப்­பினர் கடும் சர்ச்­சையைத் தோற்­று­வித்­துள்ளார்.

ரெப் பற் நியல்ஸன் என்ற மேற்­படி செனட் சபை உறுப்­பினர், பாரா­ளு­மன்ற செனட் சபையில் கருக்­க­லைப்பு தொடர்பில் இடம்­பெற்ற விவா­த­மொன்றில் உரை­யாற்­று­கை­யி­லேயே இந்தக் கருத்தை வெளி­யிட்­டுள்ளார்.

பெண்­களின் கருத்­த­ரிப்­ப­தற்­கான ஆற்­ற­லுக்கு அவர்கள் சம்­ம­தத்­துடன் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வது உயி­ரியல் ரீதி­யான கார­ணி­யா­க­வுள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.

அதனால் பாலியல் வல்­லு­றவு சம்­ப­வங்­களின் போது பெண்கள் கடும் அதிர்ச்­சிக்­குள்­ளா­வதால் அவர்கள் கர்ப்­ப­ம­டைய வாய்ப்­பில்லை என தெரி­வித்த ரெப் பற் நியல்ஸன், தான் பல வருட கால தக­வல்­களின் பிர­காரம் 5 பெண் பிள்­ளை­க­ளுக்கு தந்தை என்ற ரீதியில் இதனைத் தெரி­விப்­ப­தாக கூறினார்.

இந்­நி­லையில் அவ­ரது கருத்­தா­னது பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­பட்டு கர்ப்­பந்­த­ரித்­துள்ள பெண்கள், அந்தக் குற்­றச்­செ­யலின் போது எதிர்க்காமல் இணக்கமுடன் இருந்துள்ளதாக தவறான எண்ணத்தை தோற்றுவிப்பதாக உள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டு கின்றனர்.