வவுனியா நகரசபைத் தவிசாளராக பதவிக்கு வந்து நான்கு மதங்கள் கடந்த நிலையிலும் வவுனியா பழைய பஸ் நிலையப்பகுதியிலுள்ள கால்வாய்களில் துப்பரவுப்பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என  பொதுமக்கள் விசனம்.

துர்நாற்றம் வீசும் பகுதியாகவே தற்போது காணப்படுகின்றது. இதனால் இப்பகுதியில் மாணவர்கள், பொதுமக்கள் நடமாடமுடியாத நிலை காணப்படுகின்றது. கடந்த காலங்களில் நகரசபைச்செயலாளரினால் மேற்கொள்ளப்பட்டு வந்த வேலைத்திட்டங்கள் பல தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து மேலும் தெரிவிக்கும்போது, வவுனியா பழைய பஸ் நிலையப்பகுதியிலுள்ள கழிவு நீர் வடிந்தோடும் கால்வாய்கள் பராமரிப்பு இன்றி நீண்டகாலமாக காணப்படுகின்றது. 

வவுனியா நகரசபைத்தவிசாளராக பதிவிக்கு வந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் கழிவு நீர் வடிந்து செல்வதற்கும் துர்நாற்றம் வீசுகின்ற நிலையிலும் தவிசாளரின் வினைத்திறனற்ற செயற்பாடு காணப்படுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

 நகரசபைக்கு தவிசாளர் இருக்கின்றாரா என்ற சந்தேகத்தினையும் எமக்கு ஏற்படுத்தியுள்ளது இவ்வாறு நகரசபை பயணிக்குமாக இருந்தால் பாரிய நெருக்குதலை எதிர்கொள்ளவேண்டிய நிலை எற்படும் என்று  பொதுமக்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 

பொதுமகளின் குற்றச்சாட்டு தொடர்பாக பஸ் நிலைய வர்த்தகர்கள் சிலரிடம் கேட்டபோது கால்வாய்கள் துர்நாற்றம் வீசுகின்றது இது தொடர்பாக பல முறைப்பாடுகள் நேரடியாக நகரசபைக்கு வழங்கப்பட்டபோதும் இன்று வரையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். 

பழைய பஸ் நிலையப்பகுதிக்கு பஸ்கள் இன்றி பொதுமக்களின் வரவு குறைந்த நிலையில் காணப்படுகின்றபோதிலும் துர்நாற்றம் வீசும் காரணத்தினால் மேலும் இப்பகுதிக்கு பொதுமக்கள் வருவது குறைந்து காணப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளனர்.

பழைய பஸ் நிலையப்பகுதிகள் பலவற்றில் இவ்வாறு துர்நாற்றம் வீசும் நிலை காணப்படுகின்றது. நகரசபையின் பூரண பொறுப்பிலுள்ள  பஸ் நிலையப்பகுதியை கண்காணித்து மேற்பார்வை செய்யவேண்டிய பொறுப்பிலிருந்து நகரசபை விலகிச் சென்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.