மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் இறுதிக் கட்டமான மொரகாஹந்த நீர்த்தேகத்கத்துக்கு நீர் நிரப்பும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

மிகவும் பிரம்மாண்டமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு பலரும் வரவேற்பு வெளியிட்டுள்ளதுடன், இதற்கு பாராட்டுக்களும் தெரிவிக்கின்றனர். 

இந் நிலையில் குறித்த நீர்த்தேக்கத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹெலிகொப்படர் மூலம் வானிலிருந்து பார்த்து ரசித்து நோட்டமிட்டுள்ளார். மொரகஹந்த நீர்த்தேக்கத்‍தை ஹெலிகொட்டர் மூலமாக சுற்றிபார்த்த மஹிந்த அதனை தமது கையடக்கத் தொலைபேசியில் படமும் பிடித்துக் கொண்டார்.