சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடடிக்கவுள்ள இந்தியன் 2 படத்தின் படிப்பிடிப்பானது பிக்பாஸ் 2 நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் ஆரம்பிக்கப்படும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

கமல் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 திரைப்படம் உகமெங்கும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது. தற்போது அந்தப் படத்தின் விளம்பரப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருவதுடன் மக்கள் நீதி மய்யம் பணிகள், பிக்பாஸ்2 பணிகள் என்பவற்றிலும் தீரம் காட்டி வருகிறார் கமல்.

சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள இந்திய 2 திரைப்படம் அறிவிக்கப்பட்டு சில மாதங்களாகின்றன. இருப்பினும் அப் படித்தின் படப்பிடிப்புக்கான திகதி அறிவிக்கப்படவில்லை. 

இந் நிலையில் கமல்ஹாசன் பிக்பாஸ்2 நிகழ்ச்சிக்கான ஒப்பந்தப் முடிவடைந்ததும் இந்தியன் 2 படத்துக்கான படப்பிடிப்பினை துவங்கலாம் என அறிவித்திருக்கின்றார். இதனை பிக்பாஸ்2 நிகழ்ச்சி நேரத்தின் போதும் உறுதிப்படுத்தியிருக்கிறார் கமல். ஆகவே இந்த படித்தின் படிப்பிடிப்பானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் இறுதிக் கட்ட பணிகளையும் இந்தியன் 2 படத்தின் முதற் கட்ட பணிகளையும் ஒன்றாக கவனித்து வருகிறார் சங்கர்.

எவ்வாறிருப்பினும் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி 2.0 படம் வெளியானதும் இந்தியன் 2 படத்தின் படிப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று தெரியவருகிறது. அத்துடன் இந்தப் படமானது முழுமையான அரசியல் படமாக இருக்கும் என்று கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.