ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொட­ருக்­கான போட்டி அட்­ட­வணை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி இலங்கை அணி ஆப்­கா­னிஸ்தான் மற்றும் பங்­க­ளாதேஷ் அணி­களுடன் 'பி' பிரிவில் இடம்­பெற்­றுள்­ளது.அத்­தோடு இத் தொடரில் இந்­தியா பாகிஸ்தான் மோதும் போட்­டியும் அட்­ட­வ­ணைப்படுத்­தப்­பட்­டுள்­ளது.

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஒருமுறை ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடத்­தப்­ப­டு­கின்­றது.

அந்­த­ வகையில் 2018 ஆம் ஆண்டு ஆசிய கிண்ணத் தொடர் இந்­தி­யாவில் நடை­பெறும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால், பாகிஸ்தான் அணி பங்­கேற்­பதில் சந்­தேகம் தெரி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் ஆசிய கிண்ணப் போட்­டிகளை ஐக்­கிய அரபு அமீ­ரக நாடு­களில் நடத்த முடிவு மேற்­கொள்­ளப்­பட்­டது. அத­ன்படி எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் 15 ஆம் திகதி டுபாயில் ஆசிய கிண்ணத் தொடர் ஆரம்­ப­மா­கின்­றது. 

இப் போட்­டிகள் அபு­தாபி மற்றும் டுபாயில் நடத்­தப்­ப­டு­கின்­றன. ஆசிய கிண்­ணத்தில் விளை­யா­டு­வ­தற்கு இலங்கை, நடப்பு சம்­பி­ய­னான இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், ஆப்­கா­னிஸ்தான் ஆகிய 5 அணி­களும் நேர­டி­யாகத் தகுதி பெற்­றுள்­ளன.

இதில் எஞ்­சிய ஒரு இடத்­துக்­காக  ஹொங்கொங், மலே­சியா, நேபாளம், ஓமான், சிங்­கப்பூர், ஐக்­கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோது­கின்­றன. 

பிரிக்­கப்­பட்­டுள்­ள இரு குழுக்­க­ளில் "ஏ" பிரிவில் இந்­தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் நாடும் "பி" பிரிவில் இலங்கை, பங்­க­ளாதேஷ், ஆப்­கா­னிஸ்தான் ஆகிய அணி­களும் இடம்பெற்­றுள்­ளன.

முதலிரு இடங்­களைப் பெறும் அணிகள் "சுப்பர் – 4" சுற்­றுக்கு முன்­னேறும். ஒவ்­வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒருமுறை மோதும். 

இதில் அதிக புள்­ளி­களைப் பெறும் முதலிரு அணிகள் எதிர்வரும் செப்­டெம்பர் மாதம் 28-ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இலங்கை அணி தனது முதல் போட்டியில் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி பங்களாதேஷுடன் மோதுகின்றது.