(எம்.ஆர்.எம்.வஸீம்) 

அமைச்சரவையின் பூரண ஆதரவுடனேயே மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானித்தார். அத்துடன் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சர்வதேச அழுத்தங்களுக்கு ஜனாதிபதி ஒருபோதும் அடிபணியமாட்டார் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,

நாட்­டுக்குள் போதைப்­பொ­ருட்கள் அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் சிறைச்­சா­லை­க­ளுக்குள் இருந்தே போதைப்­பொருள் வியா­பார நட­வ­டிக்­கைகள் வழி­ந­டத்­தப்­ப­டு­வ­தா­க புல­னாய்வு தகவல் கிடைத்­தி­ருப்­ப­தா­கவும்  ஜனா­தி­பதி அமைச்­ச­ர­வையில் தெரி­வித்­தி­ருந்தார். 

அதனால் இதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக இருந்தால்,சிறைச்­சா­லை­களில் இருந்து வழி­ந­டத்­து­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். அதற்­காக போதைப்­பொருள் நட­வ­டிக்­கை­களில் கைது­செய்­யப்­பட்டு மரண தண்­டனை தீர்ப்­பாக்­கப்­பட்ட பின்­னரும்  சிறைச்­சா­லைக்குள் இருந்­து­கொண்டு இந்த நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டு­மென ஜனா­தி­பதி அமைச்­ச­ர­வையில் தெரி­வித்­தி­ருந்தார்.

 ஜனா­தி­ப­தியின் இந்த தீர்­மா­னத்­துக்கு அன்று அமைச்­ச­ர­வையில் இருந்த யாரும் எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை.மரண தண்­ட­னையை நிறை­வேற்றும் தீர்­மா­னத்தை அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டனர். தற்­போது யாரும் மரண தண்­டனை தொடர்­பாக விமர்­சிப்­ப­தாக இருந்தால் அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அத்­துடன் இது­தொ­டர்­பாக வேறு­பட்ட கருத்­து­டை­ய­வர்கள் இருக்­கலாம். என்­றாலும் அமைச்­ச­ர­வையில் தீர்­மானம் எடுக்­கப்­பட்டால் அதனை பாது­காத்­துக்­கொள்­வது அமைச்­ச­ர­வையில் இருக்கும் அனை­வ­ரதும் கூட்­டுப்­பொ­றுப்­பாகும்.

மரண தண்­ட­னையை நிறை­வேற்றும் ஜனா­தி­ப­தியின் இந்த தீர்­மா­னத்தை விரை­வாக நிறை­வேற்­று­மாறு எழுத்­து­மூலம் சிலர் ஜனா­தி­ப­திக்கு அறி­வித்­துள்­ளனர். அதே­போன்று இதனை நிறை­வேற்­றக்­கூ­டாது என சிலர் தெரி­வித்­துள்­ளனர்.என்­றாலும் அதி­க­மா­ன­வர்­களின் நிலைப்­பா­டாக இருப்­பது மரண தண்­ட­னையை நிறை­வேற்­ற­வேண்டும் என்­ப­தாகும்.அத்­துடன் மரண தண்­ட­னையை நிறை­வேற்றும் தீர்­மா­னத்­துக்கு ஜனா­தி­ப­திக்கு சர்­வ­தேச ரீதியில் அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வ­தாக  சிலர் தெரி­விக்­கின்­றனர். இதற்கு ஜனா­தி­பதி அண்­மையில் பதில் அளித்­தி­ருந்தார்.அதனால் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வதில் ஜனா­தி­பதி சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு ஒரு­போதும் அடி­ப­ணி­ய­மாட்டார். ஜெனிவா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் இது தொடர்­பாக கேள்வி எழுப்­பினால் எமது நாட்டின் நிலை­மையை தெளி­வு­ப­டுத்த முடியும்.

சர்­வ­தேச ரீதியில் 54 நாடு­களில் தண்­டனை சட்டம் நிறை­வேற்­றப்­ப­டு கின்­றது.29நாடு­களில் சட்டம் அமுலில் இருந்­தாலும் எமது நாடுபோன்று தண் டனையை நிறைவேற்றுவதில்லை.105 நாடுகளில் தண்டனைச்சட்டம் முற்றாக நீக்கப்ப ட்டுள்ளது.எமது நாட்டுக்கு அண்மை நா டான இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றது.நாட்டினதும்  நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதியுமே ஜனாதிபதி மரண தண்டனையை நிறைவேற்ற தீர்மானித்திருக்கின்றார் என்றார்.