(எம்.எம்.மின்ஹாஜ்)

மாகாண சபை தேர்தலை பழைய முறைமையில் நடத்துவதா? அல்லது புதிய முறைமையின் கீழ் நடத்துவதா? என்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. 

இக் கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை காலை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா உட்பட கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போது சிறுபான்மை கட்சிகள் ஏகமனதாக மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையிலேயே நடத்த வேண்டும் என கோரியிருந்தனர். எனினும் மக்கள் விடுதலை முன்னணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பழைய முறைமைக்கு மீண்டும் செல்ல முடியாது. ஆகவே புதிய முறைமையின் பிரகாரம் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதன்படி மாகாண சபை தேர்தலை பழைய முறைமையில் நடத்துவதா? அல்லது புதிய முறைமையின் கீழ் நடத்துவதா? என்பது தொடர்பான இறுதி தீர்மானம் எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.