தங்கக் கிண்ண கரபந்தாட்டப் போட்டி அடுத்த மாதம்

By Vishnu

25 Jul, 2018 | 05:09 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை விளையாட்டுத்துறையில் தனி ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் மிக அதிகமான விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றும் டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டிகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளன.

இப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் ஆகஸ்ட் மாத மத்திய பகுதியில் மாவட்ட மட்டப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.

வழமைபோல் 22 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலாருக்கும் போட்டிகள் நடத்தப்படுவதுடன் பகிரங்க பிரவிலும் இருபாலாருக்கும் போட்டிகள் இடம்பெறும். 

இப் போட்டிகளில் 4,000 க்கும் மேற்பட்ட அணிகளைச் சேர்ந்த 48 ஆயிரம் வீர, வீராங்கனைகள் தங்களது கரப்பந்தாட்ட ஆற்றல்களை வெளிப்படுத்த காத்திருப்பதாக டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டிகள் தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது விபரிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டியவிடம் டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் குறியீட்டை ஊடக பொது முகாமையாளர் ஹர்ஷா சமரநாயக்க  வழங்கி வைத்தார். அத்துடன் இந் நிகழ்வில் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உதவித் தலைவர் சி. ரத்னமுதலி, பொதுச் செயலாளர் ஏ.எஸ். நாலக்க, உதவித் தலைவர் கான்ச்சன ஜயரட்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இரண்டு தசாப்தங்களுக்கு மேல் நடத்தப்பட்டு வரும் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரபந்தாட்டப் போட்டிகளுக்கு 13 ஆவது வருடமாக டயலொக் ஆசியாட்டா நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது.

மாவட்ட மட்டப் போட்டிகளில் சம்பியனாகும் நான்கு அணிகள் தேசிய மட்ட இரண்டாம் சுற்றில் விளையாடும். இப் போட்டிகள் காலியில் எதிர்வரும் நவம்பர் 2,3,4 ஆம் திகதிகளில் நடைபெறும். இப் போட்டிகளிலிருந்து தேசிய மட்ட இறுதிச் சுற்றுக்கு தெரிவாகும் 4 அணிகள் மஹரகமை, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உள்ளக அரங்கில் நடைபெறும் இறுதிப் போட்டிகளில் விளையாட தகுதிபெறும். இப் போட்டிகள் டிசம்பர் 15, 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இப் போட்டிகளில் சம்பியனாகும் அணிகளுக்கு ஜனாதிபதி தங்கக் கிண்ணங்களுடன் தங்கப் பதக்கங்களும் பணப்பரிசுகளும் வழங்கப்படும்.  இரண்டாம் இடத்தைப் பெறும் அணிகளுக்கு வெள்ளிப் பதக்கங்களுடன் பணப்பரிசுகள் வழங்கப்படும்.

அத்துடன் 22 வயதுக்குட்பட்ட பிரிவிலும் பகிரங்க பிரிவிலும் அதி சிறந்த வீரர்கள், வீராங்கனைகள் நால்வருக்கு விருதுகளுடன் பணப்பரிசுகளும் வழங்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் உலகக் கிண்ண இலங்கை குழாத்தில்...

2023-02-01 18:31:57
news-image

வார இறுதியில் இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்டம்

2023-02-01 18:36:17
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் அதிகாரி...

2023-02-01 14:38:17
news-image

விசா பிரச்சினை காரணமாக கவாஜாவின் இந்திய...

2023-02-01 13:35:40
news-image

உலகக் கிண்ணத்திற்கான நேரடி தகுதியைக் குறிவைத்து...

2023-02-01 12:27:41
news-image

உலகக் கிண்ணத்தை 3ஆவது தொடர்ச்சியான தடவையாக...

2023-01-31 20:22:35
news-image

பங்களாதேஷ் அணியின் பயிற்றுநராக மீண்டும் சந்திக்க...

2023-01-31 16:19:24
news-image

நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவன்...

2023-01-31 13:48:55
news-image

ஹிமாஷவின் போட்டித் தடை 6 ஆண்டுகளாக...

2023-01-31 15:26:53
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20...

2023-01-31 09:59:01
news-image

இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா உலகக் கிண்ணத்தில்...

2023-01-31 09:45:22
news-image

கனிஷ்ட உலகக் கிண்ணத்துடன் சிரேஷ்ட உலகக்...

2023-01-30 22:27:12