மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் உள்ள வந்தாறுமுல்லை பகுதியில் இன்று  காலை காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாலமடு தெற்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள மாவடிவெம்பு இலக்கம் இரண்டைச் சேர்ந்த 65 வயதுடைய விஸ்வலிங்கம் ஏரம்பமூர்த்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று காலை தமது கால்நடைகளை பார்வையிட துவிச்சக்கர வண்டியில் சென்ற போது காட்டு பாதையில் மறைந்திருந்த யானை இவரை தாக்கி கொண்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.