வவுனியா மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 29 தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக வவுனியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

2018 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் ஜீலை 25 வரையான காலப்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் 29 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். 

இதன்படி 20 பெண்களும், 09 ஆண்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் காதல் விவகாரம், குடும்ப பிரச்சினை, கடன் தொல்லை, பெற்றோருடன் முரண்பாடு என பல்வேறு காரணங்களால் தவறான முடிவெடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாக வவுனியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதில் இளைஞர்,  யுவதிகளே அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.