பதுளை - அப்புத்தளைப்பகுதியில் லொறியொன்றிலிருந்து ஹெரோயின் பக்கற்றுக்களை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். 

323 ஹெரோயின் பக்கற்றுக்களை மீட்டுள்ள பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போதை பொருட்கள் விற்பனை செய்ய பயன்படுத்திய “சிம்” அட்டைகள், கையடக்கத் தொலைபேசிகள், வங்கிக் கணக்கு பற்று சீட்டுகள் பலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

குறித்த ஆறு பேரும்  பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது , அவர்களை அடுத்த மாதம் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.