(இரோஷா வேலு) 

வெளிநாட்டு மதுபான போத்தல்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முயற்சித்த இந்திய பிரஜையொருவர் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

குறித்த சம்பவத்தில் 27 வயதுடைய இந்திய பிரஜையொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் சட்டவிரோதமான முறையில் அனுமதிபத்திரம் பெற்றுக்கொள்ளாமல் வெளிநாட்டு மதுபான போத்தல்களை இலங்கைக்குள் கடத்த முயற்சித்துள்ளார். 

இவர் நேற்று  காலை 9 மணியளவில் இவ்வாறு ஒரு லீற்றர் நிறையுடைய 12 வெளிநாட்டு மதுபான போத்தல்கள்களுடன் பொலிஸாரால்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட குறித்த நபரை இன்று காலை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளையில் நீதவான் அவரை 12000 ரூபா அபராதம் விதித்து விடுவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.