11 வயதில் திருமணம், 13 வயதில் விபச்சாரத்திற்கு கடத்தப்பட்ட சிறுமி ; வெளிச்சத்திற்கு வந்த உண்மை

25 Jul, 2018 | 10:35 AM
image

விபச்சாரத்திற்காக 13 வயதில் கடத்தப்பட்டு,பசுக்களுக்கு வழங்கப்படும் ஊக்க மருந்துகள் வழங்கப்பட்ட பெண் தான் எதிர்கொண்ட துன்பங்களை வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்றிற்கு வெளியிட்டுள்ளார்.

பங்களாதேஷினை சேர்ந்த ரூபா என்ற பெண் கடந்த 5 வருடங்களாக பாலியல் தொழிலாளியாக கண்டிபாரா என்ற இடத்தில் பணிப்புரிந்து வருகின்றார்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ரூபா 11 வயதில் 33 வயது நிரம்பயவருடன் திருமண வாழ்வில் இணைந்துள்ளார்.

ரூபா தன்னுடைய குழந்தையினை கருவில் சுமக்கும் காலத்தில், அவருடைய கணவர் பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட முரண்பாட்டினால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவரின் மறைவின் பின் ரூபாவின் வீட்டிரினரால் ரூபா ஏற்றுக்கொள்ள மறுக்கப்படுகிறார்.

“உன்னுடைய கன்னித்தன்மையினை நீ இழந்தமையால் வேறு ஆண்கள் உன்னை மணமுடிக்க மாட்டார்கள் ” என்ற காரணத்தினை முன்வைத்து தன்னையும் தன் மகனையும் வீட்டினுள் அனுமதிக்க மறுத்ததாக ரூபா தெரிவித்தார்.

தன்னுடைய வாழ்வினை கொண்டு நடத்த வேலை தேடி டாகா வந்தடைந்த ரூபா, பாலியல் தொழிலாளி ஒருவரினால் கடத்தப்பட்டு விபாச்சாரத்திற்காக விற்கப்பட்டுள்ளார்.

கண்டிபாரா இடத்திற்கு அழைத்து வரப்பட்ட ரூபா 3 தினங்கள் ஒரு அறையில் அடைக்கப்பட்டு, தப்பிக்க முயற்சிக்கும் வேளையில் அங்குள்ளவர்களால் அடிக்கப்பட்டுள்ளார்.

18 வயதுடைய தோற்றத்தினை கொண்டுவர ஒரெடெஸோன் மற்றும் பசுக்களுக்கு வழங்கப்படும் ஊக்க மருந்துகளை கட்டாயப்படுத்தி ரூபாவிற்கு வழங்கியுள்ளனர்.

பங்களாதேஷின் சட்டத்தின் படி பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமம் பெற்றுள்கொள்ள வேண்டும் மற்றும் 18 வயதிற்கு கீழ்பட்டவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

என்  உரிமம் பெற பொலிஸ் நிலையத்திற்கு இறுதியாக அனுப்பப்பட்டபோது,மீண்டும் துன்புறத்தப்படுவேன் என்ற பயத்தில் எனது அம்மையார் சொல்ல சொன்னார். “நான் 18 வயது நிரம்பியவள். நான் விபச்சாரத்தில் ஈடுப்பட ஆசையாகவுள்ளேன். எனக்கு வேறு வழியில்லை” என மீண்டும் மீண்டும் தெரிவித்தேன். 

தற்போது ரூபா தன்னுடைய ஒரு நாள் வாழ்வாதாரத்திற்காக 10 முதல் 12 வாடிக்கையாளர்களுடன் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்.அவருக்கு ஒருவரிடமிருந்து 367.74 ருபா (இலங்கை மதிப்பு) கட்டணமாக கிடைப்பதாக தெரிவித்தார்.

ரூபா இதுவரைக்காலத்திற்கு மருத்துவ பரிசோதனைகள் எதுவும் மேற்கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“என்னுடைய எதிர்காலத்தினை நோக்கி சிந்திக்க ஆசை இருந்தாலும்,அது நடைப்பெறாது என்பது எனக்கு தெரியும்” என ரூபா தெரிவித்தார்.

யுனிசெப் நிறுவனத்தின் கணக்கெடுப்பின் படி 15 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட 22 வீதமான பெண்கள் 2017 ஆம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.இதில் 59 பெண்கள் 18 வயதில் திருமணம் செய்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right