முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் அறிக்கை இன்று ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் முன்வைக்கப்படவுள்ளதாக ஐ.தே.கட்சியின் பொது செயலாளருமான அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்  தெரிவித்துள்ளார். 

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலுக்கு அமைவாக ஐக்கிய தேசிய கட்சியினால் விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

இக் குழுவிடம் விஜயகலா மகேஸ்வரன் முன்வைத்திருந்த எழுத்துமூல விளக்கமளிப்பின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.