மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 41ஆவது நாளாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் நீதவான் ரீ.ஜே.பிரபாகரன் முன்னிலையில்,விசேட சட்ட வைத்திய நிபுனர் தலைமையில் குறித்த பணிகள் இடம் பெற்று வருகின்றது.

தற்போது வரைக்கும் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் சுமார் 52 பெட்டிகளில்  அடைக்கப்பட்டு பாதுகாப்புக் கருதி மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறையொன்றில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் கண்டு பிடிக்கப்பட்ட மனித மண்டையோடுகள், மற்றும் எலும்புக்கூடுகள் ஆகியவற்றை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அகழ்வு பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.