பௌத்த துற­வி­க­ளான தாய்­லாந்து குகைச் சிறார்கள்

Published By: J.G.Stephan

25 Jul, 2018 | 09:07 AM
image

தாய்­லாந்து குகை­யொன்றில் சிக்­கிய நிலையில் மீட்­கப்­பட்ட சிறார்­களில் 11 பேர் பௌத்த துற­வி­க­ளாக தற்­கா­லி­க­மாக துற­வறம் பூண­வுள்­ளனர். அதே­வேளை அவர்­களின் பயிற்­று­நரான 25 வயது இளைஞர் முழு­மை­யான பிக்­கு­வாக துற­வறம் பூண­வுள்ளார். இது தொடர்­பான வைபவம் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

தாய்­லாந்தின் வைல்ட் போவர் எனும் 16 வய­துக்­குட்­பட்ட கால்­பந்­தாட்ட அணியைச் சேர்ந்த 12 சிறு­வர்­களும் பயிற்­று­நரும் தாம் லுவாங் எனும் குகைக்குள் கடந்த ஜூன் 23 ஆம் திகதி நுழைந்த பின்னர் வெள்ளம் கார­ண­மாக வெளியே வர முடி­யாமல் தவித்­தனர். 9 நாட்­களின் பின் கடந்த 2 ஆம் திகதி பிரித்­தா­னிய சுழி­யோ­டி­களால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டனர். அதன்பின் 13 பேரும் வெற்­றி­க­ர­மாக மீட்­கப்­பட்­டனர்.

இந்­நி­லையில், மேற்­படி சிறு­வர்­களில் 11 பேர் தற்­கா­லி­க­மாக துற­வி­க­ளா­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளனர். மேற்­படி சிறு­வர்கள் 11 முதல் 16 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளாவர்.

இவர்கள் துற­வறம் பூணும் வைபவம் இன்று புதன்­கி­ழமை நடை­பெறும் என சியாங் கராய் மாகா­ணத்தின் ஆளுநர் பர்சோன் பிரத்­சகுல் தெரி­வித்­துள்ளார்.

குகை­யி­லி­ருந்து மீட்­கப்­பட்ட மற்­றொரு சிறுவன் பௌத்தர் அல்­லாத கார­ணத்தால் அவர் இதில் பங்­கு­பற்­ற­வில்லை எனவும் ஆளுநர் பிரத்­சகுல் தெரி­வித்­துள்ளார்.

தாய்­லாந்­தி­லுள்ள பௌத்த ஆண்கள் தமது வாழ்க்­கையின் ஒரு கட்­டத்தில் துற­வறம்; பூணு­வது,பெரும்­பாலும் தற்­கா­லி­க­மாக பாரம்­ப­ரி­ய­மா­க­வுள்­ளது.

இச்­சி­று­வர்கள் பல்வேறு ஆச்சிரமங் களில் ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை 9 நாட்கள் தங்கியிருந்து தியானத்திலும் வழிபாடுகளிலும் ஈடுபடுவர் என அறி விக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17