2016 ஆம் நிதி­யாண்­டுக்­கென முன்­வைக்­கப்­பட்­டுள்ள தேசிய அர­சாங்­கத்தின் வரவு செலவுத் திட்­டத்தில் பொரு­ளா­தாரக் கொள்­கைகள் என்று எதுவும் கிடை­யாது. மக்­க­ளுக்கும் எந்­த­வி­த­மான நன்­மை­களும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை என ஜே.வி.பி. அர­சாங்­கத்தை கடு­மை­யாக சாடி­யுள்­ளது.

நேற்று பாரா­ளு­மன்­றத்தில் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வினால் முன்­வைக்­கப்­பட்ட 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்டம் குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே ஜே.வி.பி.யின் தலை­வரும் எதிர்க்­கட்­சியின் பிர­த­ம கொற­டா­வு­மான அனு­ர­கு­மார திஸா­நா­யக்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் கூறு­கையில்,
தேசிய அரசாங்கத்தின் அடுத்த ஆண்­டுக்­கென சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள வரவு செல­வுத்­திட்­டத்தின் பொரு­ளா­தார மூலோ­பா­யங்கள் நாட்டை முன்­னேற்றப் பாதையில் இட்டுச் செல்­வ­தற்கு எது­வித பங்­க­ளிப்­பையும் வழங்­கப்­போ­வ­தில்லை.
நம் நாட்டின் காணி விற்­பனைச் சந்தை வாய்ப்­புகள் மற்றும் நிதிச் சந்தை போன்­ற­வற்றை தனி­யா­ருக்கு தாரை வார்த்தல், கல்­வியை வர்த்­தகப் பண்­ட­மாக கருத முற்­ப­டுதல், அரச சேவையை வெட்­டுக்­குள்­ளாக்கி, ஓய்­வூ­தி­யத்தை இல்­லா­தொ­ழித்தல் போன்ற முன்­மொ­ழி­வுகள் வரவு செலவுத் திட்­டத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.
இதன் மூலம் நாட்டை முன்­னேற்றப் பாதையில் இட்டுச் செல்­வ­தற்­கான சிறந்த பொரு­ளா­தார கொள்கை அர­சாங்­கத்­திடம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. அத்துடன் மக்களுக்கும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.