அதிக வருமான வரி செலுத்தியோர் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி முதலிடத்தில் உள்ளார்.

இவ்வாண்டில் அவர் ரூபா 12.17 கோடியை வருமான வரியாக செலுத்தி பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் அதிக வருமான வரி செலுத்தியவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகேந்திர சிங் டோனி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மட்டுமல்லாமல் தற்போது வரை விக்கெட் காப்பளாராக தனது அணிக்காக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சாதனைகளைப் படைத்த மகேந்திர சிங் டோனிக்கு  தற்போது 37 வயதாகின்றது டோனிக்கு வயதான காரணத்தினால் ஓய்வுபெறவுள்ளதாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளநிலையில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், 2017-2018 நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்தியவராக தோனி உள்ளார். 

அவர். 12.17 கோடி ரூபாயை வருமான வரியாக செலுத்தியுள்ளார். அதற்கு முந்தைய ஆண்டு அவர் ரூபா 10.93 கோடி செலுத்தினார். ஆனால், அந்த ஆண்டில் அதிக வரி செலுத்தியோரில் அவர் முதலிடத்தில் இல்லை. கிரிக்கெட் விளையாடுவதற்கான சம்பளத்தைத் தவிர, பல்வேறு விளம்பரங்கள் மூலம் டோனிக்கு வருமானம் கிடைத்து வருகிறது. 

ஏற்கனவே 2013-2014 நிதியாண்டிலும் பீகார், ஜார்க்கண்ட் மண்டலத்தில் அதிக வருமான வரி செலுத்தியோரில் முதலிடத்தில் தோனி இருந்தார். 

இதில் குறிப்பிடத்தக்க வேண்டிய விடயம் அதிக வரி செலுத்துவது என்பதல்ல தன் வருமானத்தை சரியாக கணக்கில் இட்டு வருமான வரியை சரியான முறையில் செலுத்தியமை என்பது மகேந்திர சிங்  டோனிக்கு பெருமைக்குரிய விடயமாகும் 

பல நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என எல்லோரும் உரிய முறையில் வரி செலுத்தாமை உட்பட்ட வழக்கில் சிக்கிக்கொள்ளும் நிலையுள்ளமை குறிப்பிடத்தக்கது.