இலங்கையில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற மொபைல் தொலைதொடர்பாடல்கள் சேவை நிறுவனமான HUTCH, நாட்டில் மோட்டார் பந்தய நிகழ்வுகளுக்கான தனது ஆதரவை தொடர்ந்தும் வழங்கி வருகின்றது. 

அந்த வகையில் இலங்கை பந்தய மோட்டார் கார் ஓட்டுனர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் சங்கத்தின் பங்குடமையுடன் இலங்கை கடற்படையால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Colombo Supercross 2018 என்ற மோட்டார் பந்தய நிகழ்வுக்கான அனுசரணையை HUTCH முன்வந்து வழங்கியிருந்தது. ராகம, வெலிசறையிலுள்ள சரளைக்கற்களைக் கொண்ட வியப்பூட்டும் பந்தயத் திடலில் Colombo Supercross 2018 பந்தயங்கள் இடம்பெற்றன. 

முப்படையினர் உட்பட பெரும் எண்ணிக்கையான மோட்டார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய ஓட்டுனர்கள் இதில் பங்குபற்றி, இந்த ஆண்டு மோட்டார் பந்தய நாட்காட்டியில் மிகவும் வெற்றிகரமான நிகழ்வுகளில் ஒன்றாக அதனை மாற்றியிருந்தனர்.