ஜப்பானில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக கடந்த வாரத்தில் மாத்திரம் 65 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

டோக்கியோ நகருக்கு அருகில் உள்ள குமகாயா நகரில் நேற்று வெப்பநிலை மிக அதிகமாக காணப்பட்டதாகவும் அது 41.1 செல்சியஸாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

2013 ஆம் ஆண்டு பதிவான 41 செல்சியஸ் வெப்பநிலையே ஜப்பானில் பதிவான அதிக கூடிய வெப்பநிலையாக காணப்பட்டது. 

பல நகரங்களிலும் வெப்பநிலை சுமார் 40 செல்சியஸாக காணப்படுவதுடன் வெப்பத்தால் பாதிக்கப்படும் சூழ்நிலையை தவிர்த்து குளிரூட்டப்பட்ட இடங்களில் இருக்கும் படியும், அதிகம் தண்ணீர் அருந்தும் படியும் ஜப்பான் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. 

22,000க்கும் அதிகமானவர்கள் அதிக வெப்பநிலை காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன