(எம்.மனோசித்ரா)

கொழும்பு, கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வு கூடம் தீக்கிரையானதில் கல்லூரியின் தளபாடங்கள் மற்றும் கணனிகள் உள்ளிட்ட இரண்டு கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இரண்டு மாடிகள் கொண்ட கட்டடத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள தொழில்நுட்பட ஆய்வு கூடத்தின் மின் இணைப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே இந்த தீ பரவ ஆரம்பித்துள்ளது.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு வருகை தந்த தீயணைப்பு படையினரும் பொலிஸாரும் இணைந்து தீப் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் குறித்த கட்டடத்தில் காணப்பட்ட உடைமைகள் அனைத்தும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.