2,000  ஆண்­டுகள் பழ­மை­யான  எகிப்­திய கல்லால் செதுக்­கப்­பட்ட அலங்­கார சவப்­பெட்­டி­யினுள் காணப்­பட்ட  சிவப்பு நிற­மான  திர­வத்தை  அருந்த  அனு­ம­திக்கக் கோரி  பல்­லா­யி­ரக்­க­ணக்­கான  மக்கள்  மனு­வொன்றில் கையெ­ழுத்­திட்­டுள்­ளனர்.

அந்த  சிவப்பு நீரா­னது  மர­ணத்தை  அண்­ட­வி­டாது உயிரை சஞ்­சீ­வி­யாக பேணும் ஒரு அமுதம் என அவர்கள் கரு­து­கின்­றனர். ஆனால் நிபு­ணர்­களோ அது சாக்­கடை நீர்  எனத் தெரி­விக்­கின்­றனர்.

கடற்­கரை நக­ரான அலெக்­ஸாண்ட்­றி­யாவில் மேற்­படி  கல்­லாலான சவப்­பெட்டி  இந்த மாத ஆரம்­பத்தில் திறந்து வைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து  அது தொடர்­பில பல்­வேறு ஊகங்கள் பரவி வரு­கின்­றன.

அந்தக் கல்­லா­லான சவப்­பெட்டி பண்­டைய  ஆட்­சி­யா­ளர்கள் எவ­ருக்கும் உடை­மை­யா­னது அல்ல  என ஆய்­வா­ளர்­களால்  தெரி­விக்­கப்­ப­டு­கின்ற நிலை­யிலும் அந்த சவப்­பெட்­டி­யி­லி­ருந்த எச்­சங்கள் குறித்து மேலும் விப­ரங்­களைக் கண்­ட­றிய  அவற்றை  மறு­சீ­ர­மைக்கும் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது.

இந்­நி­லை­யில அந்த கறுப்பு நிற கல்­லா­லான சவப்­பெட்­டியில் தேங்­கி­யுள்ள நீரை அருந்­து­வ­தற்கு கோரிக்கை விடுக்கும் விண்­ணப்ப மனுவில் 11,000  பேருக்கும் அதி­க­மானோர் கைச்­சாத்­திட்­டுள்­ளனர்.

கிரேக்க ஆட்­சி­யா­ள­ரான மகா  அலெக்­ஸாண்­ட­ருக்கு இந்த  சவப்­பெட்டி  சொந்­த­மா­னது என அவர்கள் நம்புகின்றனர். அந்த சவப்­பெட்­டி­யி­லான  நீரை அருந்­து­வது  அதன் சக்­தி­களை பெற்­றுக்­கொள்ள வழி­வகை செய்யும் என  அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த சவப்பெட்டி திறக்கப்பட்டமையானது  சாபத்தை கட்டவிழ்த்து விடுவதாகவுள்ளதாக வேறு சிலர் தெரிவித்துள்ளனர். அந்த மர்மமான   10  அடி நீளமும் 6.5   அடி உயரமும் கொண்ட சவப்பெட்டி  தரையிலிருந்து 16  அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தது.

30  தொன் நிறையுடைய அந்த சவப்பெட்டியில் 3  உருக்குலைந்த  எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டன. தற்போது அந்த 3  எலும்புக்கூட்டு எச்சங்களும்  அலெக்ஸாண்டறியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில்  கல்லாலான சவப்பெட்டி  இராணுவ அருங்காட்சியகமொன்றுக்கு இடமாற்றப்படவுள்ளது.