பலாத்காரம் உத்தர பிரதேசத்தில் அம்ரோஹா மாவட்டத்தில் ஹசன்பூர் கொட்வாலி பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண் தனது தாயுடன் ஹசன்பூர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு பொலிஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் மனோஜ் என்ற 22 வயது இளைஞர் தன்னை 5 மாதங்களுக்கு முன் துப்பாக்கி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த இளைஞர் தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறினார்.

கருக்கலைப்பு செய்ததற்கான ஆதாரமாக பையில் வைத்து 5 மாத கருவையும் கையில் எடுத்து சென்று காண்பித்தார்.

அதைக் கண்ட பொலிஸார் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும், பொலிஸார் தப்பியோடிய மனோஜை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கருவை பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்து உள்ளனர்.