தாய்லாந்து குகையில் சிக்கிய கால்பந்து சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட அணியை மீட்ட  மீட்பு  குழுவினரை அந்நாட்டு சித்திர கலைஞர்கள் ஓவியங்கள் மூலம் மாரியாதை செலுத்தியுள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் அமைந்துள்ள தாம் லுவாங் என்ற குகை சுமார் 10 கிலோ மீட்டர். நீளமுடையதாகவும் ஆசியாவிலேயே மிகப்பெரிய குகையாகும் உள்ளது.

 தாய்லாந்து மியான்மர் எல்லையில் அமைந்துள்ள இந்தக் குகைக்கு மாகாணத்தைச் சேர்ந்த வைல்ட் போர் எனும் 11 வயது முதல் 16 வயதுடைய கால்பந்து அணியைச் சேர்ந்த சிறுவர்கள் கடந்த ஜூன் 23 ஆம் திகதி குறித்த குகைக்குச் சுற்றுலா சென்றுள்ளனர்.

இந்த சிறுவர்களுக்கு உதவியாக துணைப் பயிற்சியாளர் எக்காபோல் சந்தாவாங் உடன் சென்றனர். அப்போது அங்கு பெய்த கன மழை காரணமாக குகையில் சிக்கிக் கொண்டனர். பின் 18 நாட்கள் போராட்டங்களுக்குப் பிறகு அனைவரும் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில் தாய்லாந்து கால்பந்து அணியை மீட்ட மீட்பு குழுவை சிறப்பிக்கும் வகையில்,  அந்நாட்டு உள்ளூர் கலைஞர்கள் மீட்புப் பணி குழுவினரை சுவர்களில் சித்திரங்களாக வரைந்து கௌரவப்படுத்தியுள்ளனர்.

இந்த சுவரோவியங்களில் மீட்புப் பணியின்போது உயிரிழந்த சமான் குனான்னை சிறப்பான இடம் வழங்கப்பட்டுள்ளது. மற்றும்  இவருக்கு குட்டி சிலையையும் கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர்.

இந்த சுவரோவியங்கள் தாய்லாந்தின் வடக்குப் பகுதியிலுள்ள தனியார் கலைக் கூடமான ஆர்ட் பிரிட்ஜ்ஜில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.