வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்கபுர பகுதியில் சுமார் 201 கிராம் 160 மில்லி கிராம் பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் லச எனப்படும் கெசல்வத்த லசந்தவின் உதவியாளர் ஆவார். இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதியானது 24 இலட்சம் ரூபாவாகும்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.