(எம்.எம்.மின்ஹாஜ்)

மாகாண சபை தேர்­தலை தாம­தப்­ப­டுத்­தாமல் உடன் நடத்த வேண்டும். மாகாண சபை உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்கக் கூடாது. மேலும் சிறு­பான்மை இனங்­க­ளுக்கு அநீதி ஏற்­பட்­டுள்­ள­மை­யினால் எல்லை நிர்­ணயம் மீள திருத்தம் செய்­யப்­படல் வேண்டும் என்­பதால் அதற்கு அதிக காலம் தேவை­யாகும். ஆகவே பழைய முறை­மையின்  பிர­காரம் உடன் தேர்­தலை நடத்த வேண்டும் என  சிறு­பான்மை கட்­சிகள் ஒன்றுகூடி நேற்று தீர்­மானம் எடுத்­த­துள்­ளன.

அத்­துடன் இந்த தீர்­மா­னத்தை வியா­ழக்­கி­ழமை கூட­வுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான விசேட கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் எடுத்­து­ரைக்­கவும் முடிவு செய்­யப்­பட்­டது.

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்­பான  சிறு­பான்மை கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான முக்­கிய கூட்டம் நேற்று திங்­கட்­கி­ழமை தேசிய நல்­லி­ணக்க, சக­வாழ்வு மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சில் நடை­பெற்­றது. இந்த கூட்­டத்தில்  தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோகணேசன், ஈழ மக்கள் ஜன­நா­யக கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டகள்ஸ் தேவா­னந்தா, அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பொதுச்­செ­ய­லாளர் ஸூபைர்தீன் ஆகியோர் கலந்து கொண்­டனர். இதன்­போதே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த சந்­திப்பின் போது மாகாண சபையின் புதிய தேர்தல் முறை­மையின் பாத­க­மான தன்மை குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்­டது. அத்­துடன் இதன்­போது வியா­ழக்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள விசேட கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில்  எடுத்­து­ரைக்க வேண்­டிய விவ­கா­ரங்கள் குறித்தும் பேசப்­பட்­டன.

 புதிய தேர்தல் முறை­மை­யினை ஏற்க முடி­யாது. குறித்த முறைமை சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கு சாத­க­மா­ன­தில்லை. தற்­போது நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்ள எல்லை நிர்­ணயம் ஏற்க முடி­யா­தது. ஆகவே எல்லை நிர்­ணயம் மீள செய்­யப்­பட வேண்டும். அதற்கு அதி­க­ளவில் காலம் தேவை­யாகும். ஆகவே அது­வரை ஜன­நா­யக உரி­மை­யான தேர்­தலை பிற்­போட முடி­யாது. இத­ன­டிப்­ப­டையில் பழைய முறை­மையின் பிர­காரம் உடன் தேர்­தலை நடத்த வேண்டும்  என்றும் இந்த கூட்­டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.

அதே­போன்று புதிய முறை­மையின் பிர­காரம் தேர்­தலை நடத்­தினால் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை போன்று  மாகாண சபை உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை இரு மடங்­காக அதி­க­ரிக்கும். அவ்­வாறு செய்தால் மக்கள் மத்­தியில் அதீத பாரத்தை சுமத்­து­வ­து­போன்று   ஆகி­விடும். ஆகவே மாகாண சபை உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­படக் கூடாது எனவும் குறித்த சந்­திப்பில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. 

ஆகவே பழைய முறை­மையின் பிர­காரம் தேர்­தலை நடத்த வேண்டும் என்ற தீர்­மா­னத்தை  வியா­ழக்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கூட­வுள்ள விசேட கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் எடுத்­து­ரைக்­கவும் இந்த கூட்­டத்தில் முடிவு செய்­யப்­பட்­டது. 

இந்த சந்­திப்பின் பின்னர் அமைச்சர் மனோ கணேசன் ஊட­கங்­க­ளுக்கு குறிப்­பி­டு­கையில்,

மாகாண சபை தேர்­தலை பழைய முறை­மையின் பிர­காரம் நடத்த வேண்டும் என நாம் ஏற்­க­னவே ஜனா­தி­ப­தி­யி­டமும் பிர­த­ம­ரி­டமும் அறி­வித்து விட்டோம். தற்­போ­தைக்கு அனைத்து கட்­சி­களும் பழைய முறை­மையின் பிர­காரம் தேர்­தலை நடத்த இணக்கம் தெரி­வித்­துள்­ளன. எனினும் அமைச்சர் பைசர் முஸ்­தபா புதிய முறை­மையின் பிர­காரம் தேர்­தலை நடத்த வேண்டும் என்­பதில் உறு­தி­யாக உள்ளார். அது சுதந்­திரக் கட்­சியின் தீர்­மா­னமா என்­பது எமக்கு தெரி­யாது. சுதந்­திரக் கட்சி கூட பழைய முறை­மையின் பிர­காரம் தேர்­தலை நடத்த இணக்கம் தெரி­வித்­துள்­ளது. ஆனால் அமைச்சர் பைசர் முஸ்­தபா பழைய முறை­மையை எதிர்க்­கின்றார். தற்­போது விளை­யாட்டு அமைச்சர் என்­ப­தனால் அவர் எம்­முடன் விளை­யா­டு­கின்றார். விளை­யாட்டு அமைச்சர் எம்­முடன் விளை­யா­டலாம் என எத்­த­னிக்க கூடாது. நாம் புல்லட் ஏந்­துவோர் அல்ல. நாம் பெல்லட் பேப்பர் ஏந்­து­ப­வர்கள். ஆகவே எமது உரி­மைக்கு மதிப்­ப­ளிக்க வேண்டும்.

புதிய முறை­மையின் பிர­காரம் தேர்­தலை நடத்­தினால் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்கும். உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் கூட நான்­கா­யி­ர­மாக இருந்த உறுப்­பினர் எண்­ணிக்கை எட்­டா­யிரம் வரை அதி­க­ரித்­துள்­ளது. இது மக்­களின் மீது இன்னும் பாரத்தை சுமத்­து­வ­தாக உள்­ளது. இதன்­படி புதிய முறை­மையின் பிர­காரம் தேர்­தலை நடத்­து­வ­தாயின் மாகாண சபை­யிலும் அதே நிலை­மைதான் ஏற்­படும். ஆகவே தற்­போ­தைக்கு மாகாண சபை தேர்­தலை பழைய முறை­மையில் நடத்தி விட்டு தேர்­தலின் பின்னர் காலம் எடுத்து புதிய முறை­மையை நிறை­வேற்­றுவோம் என்றார்.