முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் யானைகளின் அட்டகாசத்தினால் தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த இந்த விடயத்தை பல்வேறு தரப்பினரிடம் தெரிவித்துள்ளதாகவும் இருப்பினும் அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

இந்த நிலையில் ஒட்டுசுட்டான் மான்குளம் வீதியில் அதிகரித்துள்ள யானைகளின் அட்டகாசத்தால் வீதியில் செல்லும் மக்கள் அச்சத்துடன் பயணிக்க நேரிட்டுள்ளதுடன் பகல் வேளைகளிலும் வீதியோரங்களில் யானைகள் நடமாடுவதும் குறிப்பிடத்தக்கது.