யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த பெண் காரைநகர் களபூமி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இந்திரன் சிவகலா என்பவர் ஆவார்.

கடந்த 16 ஆம் திகதி குறித்த பெண் பிரசவத்துக்காக காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந் நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் ஆண் குழுந்தையை கடந்த சனிக்கிழமை பிரசவித்த பின்பு ஒரு சில மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார். 

இது தொடர்பான விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்ட போது, சத்திர சிகிச்சையின் பின்னர் அவருக்கு ஏற்பட்ட குருதி அமுக்கமே அவர் உயிரிழந்தமைக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.