யழ்.மாவட்டத்தில் கொக்குவில், பலாலி மற்றும் சங்கனை ஆகிய பகுகளைச் சேர்ந்த மூவர் திடீரென மயங்கி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளனர்.

கொக்குவில் கிழக்கை சேர்ந்த 60 வயதுடைய கார்த்திகேசு கதிர்காமத்தம்பி என்பவர் வீட்டில் பாக்கு இடித்துக் கொண்டிருந்த வேளை திடீரென மயங்கி வீழந்துள்ளார். இந் நிலையில் உறவினர்கள் அவரை உடனே யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்கையில் உயிரிழந்தார்.

அத்துடன் பலாலியைச் சேர்ந்த 30 வயதுடைய குணசீலன் குயின்சன் என்பவர் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த சமயம் மயங்கி வீழந்த நிலையில் உறவினர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அவரை சேர்த்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

மேலும் மன்னார் பெரிய தம்பம் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய இராமன் இராசதுரை என்பவர் சங்கானை பகுதியில் மயங்கி வீழ்ந்த நிலையில் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.