சிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி

Published By: Vishnu

23 Jul, 2018 | 11:10 AM
image

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் ஈரா­னுக்கு எதி­ரான பகை­மை­யான   கொள்­கைகள்   கார­ண­மாக அமெ­ரிக்கா அனைத்துப் போர்­க­ளுக்கும் தாய் போன்ற  பாரிய போரொன்றை  எதிர்­கொள்ள நேரிடும் என ஈரா­னிய ஜனா­தி­பதி ஹஸன் ரோஹானி எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

"ஈரா­னு­ட­னான போர் அனைத்துப் போர்­க­ளுக்கும் தாய் போன்று அமையும் என்­பதை அமெ­ரிக்கா அறிந்து கொள்ள  வேண்டும்"  என் அவர்  கூறினார்.

ஈரா­னிய அணு­சக்தி  நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் அந்­நாட்­டுடன் 2015  ஆம் ஆண்டு செய்து கொள்­ளப்­பட்­டி­ருந்த  சர்­வ­தேச அணு­சக்தி உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து தனது நாட்டை வாபஸ் பெறு­வ­தற்கு டொனால்ட் ட்ரம்ப்  தீர்­மானம் எடுத்­த­தை­ய­டுத்து ஈரா­னா­னது  அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து அதிக அழுத்­தங்­க­ளையும்  தடை­க­ளையும் எதிர்­கொள்ளும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் நேற்று ஈரா­னிய இரா­ஜ­தந்­தி­ரிகள் மத்­தியில் உரை­யாற்­றிய  ஹஸன் ரோஹானி, "திரு­வாளர் ட்ரம்ப் அவர்­களே,   சிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள். அது துன்­பத்­திற்கு மட்­டுமே வழி­யேற்­ப­டுத்தித் தரும்"  என்று தெரி­வித்தார்.

"ஈரா­னு­ட­னான சமா­தானம்  அனைத்து சமா­தா­னத்­திற்கும் தாய் போன்று அமை­வ­துடன்  ஈரா­னு­ட­னான போர்  அனைத்துப் போர்­க­ளுக்கும் தாய் போன்று அமையும் என்­பதை  அமெ­ரிக்கா அறிந்து கொள்ள வேண்டும்" என அவர் மேலும் கூறினார்.

1979  ஆம் ஆண்டு இஸ்­லா­மிய புரட்­சியின் பின்னர் இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான சமா­தானம்  அபூர்­வ­மான ஒன்­றாக  இருந்து வரு­வ­தாக  அவர் குறிப்­பிட்டார்.

ஈரானில் இஸ்­லா­மிய  அர­சாங்­கத்தின் ஸ்திரத்­தன்­மையைக் குலைக்க  அமெ­ரிக்கா முயன்று வரு­வ­தாக  வெளி­யான அறிக்­கைகள் குறித்து  ஹஸன் ரோஹானி  விப­ரிக்­கையில், "ஈரா­னிய  பாது­காப்பு மற்றும் அக்­க­றை­க­ளுக்கு எதி­ராக  ஈரா­னிய தேசத்தை தூண்டி விடும் நிலையில் நீங்கள் இல்லை"  எனத் தெரி­வித்தார்.

பிர­தான  எண்ணெய் கப்பல் போக்­கு­வ­ரத்துப் பாதை­யான  ஹொர்மஸ் நீரிணை மற்றும்  வளை­குடா பிராந்­தி­யத்தில்  ஆதிக்­கத்தைக் கொண்ட  நாடு என்ற வகையில் ஈரானின்  எண்ணெய் ஏற்­று­ம­தி­களை   எந்­நாடும் தடுக்க முடி­யாது  என அவர் ஏற்­க­னவே அமெ­ரிக்­கா­வுக்கு சவால் விடுத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஈரா­னிய உச்ச நிலைத் தலைவர்  ஆய­துல்லாஹ் அலி கமெய்னி  ஈரான்  தனது சொந்த எண்ணெய் ஏற்­று­ம­தி­களை எந்த நாடா­வது தடுக்க முயற்­சிக்கும் பட்­சத்தில்  வளை­குடா பிராந்­தி­யத்­தி­லி­ருந்து அவ்­வா­றான நாட்­டிற்கு செல்­லலும்  அனைத்து எண்ணெய் ஏற்­று­ம­தி­க­ளுக்கும் முட்­டுக்­கட்டை போடும்  என்ற   ஹஸன் ரோஹா­னியின்  கருத்­துக்கு  நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை  ஆத­ர­வ­ளித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் ஈரா­னிய  உயர்­மட்ட  இரா­ணுவக் கட்­டளைத் தள­ப­தி­யொ­ருவர்  டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் ஈரானுக்குள்  ஆக்கிரமிப்பை மேற்கொள்ள  தயாராகி வருவதாக எச்சரித்துள்ளார்.

"எதிரியின்  நடத்தையை முன்கூட்டியே எதிர்வுகூற முடியாதுள்ளது"  என  இராணுவ ஊழியத் தலைவர்   ஜெனரல் மொஹமட் பாகேரி  தெரிவித்தார்.

"தற்போதைய அமெரிக்க அரசாங்கம்  இராணுவ அச்சுறுத்தலொன்று  தொடர்பில் பேசுவதைக் காண முடியாத போதும்,  எமக்குக் கிடைத்த  பெறுமதி மிக்க  தகவலொன்றின் பிரகாரம்  ஈரானிலான இராணுவ ஆக்கிரமிப்புக்கு   தயாராக அமெரிக்க இராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது"  என அவர்  கூறினார்.

அமெரிக்காவின் புதிய தடைகள் காரணமாக  இந்த வருட இறுதிக்குள்  ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகள் மூன்றில் இரண்டு மடங்கிற்கும் அதிகமான அளவில் வீழ்ச்சியடையக் கூடிய நிலை நிலவுவதாக  தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷ் தனது சொந்த நலனுக்காக சிறுபான்மையினரை...

2024-12-13 14:40:45
news-image

அமெரிக்க புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரி...

2024-12-13 14:08:30
news-image

மெட்டா, கூகுள் நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும்...

2024-12-13 14:07:22
news-image

டிரம்பின் பதவியேற்பு நிகழ்வில் சீன ஜனாதிபதி?

2024-12-13 13:57:52
news-image

சிரியாவின் கிளர்ச்சியாளர்களிற்கு உக்ரைன் ஆளில்லா விமானங்களை...

2024-12-13 08:11:56
news-image

இத்தாலியின் கடற்பரப்பில் கவிழ்ந்த படகு -மூன்று...

2024-12-12 11:15:05
news-image

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5...

2024-12-12 10:24:16
news-image

மேற்குகரையில் பேருந்தின் மீது துப்பாக்கி பிரயோகம்...

2024-12-12 08:00:31
news-image

சிட்னியில் யூதர்கள் அதிகமாக வாழும் பகுதியில்...

2024-12-12 07:41:45
news-image

ஜேர்மனியில் வன்முறையில் ஈடுபட திட்டம் -...

2024-12-12 07:33:34
news-image

ஆப்கானில் தற்கொலைகுண்டு தாக்குதல்- அகதிகள் விவகார...

2024-12-11 19:59:07
news-image

தென்கொரிய ஜனாதிபதியின் அலுவலகத்தில் பொலிஸார் தேடுதல்

2024-12-11 14:52:28