நடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக தற்போது நடித்து வரும் என் ஜி கே படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் என் ஜி கே என்றால் நந்த கோபால குமரன் என்ற விளக்கத்தையும் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பின் ஏராளமான ரசிகர்களும் ரசிகைகளையும் கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவரின் படங்கள் எப்போது வெளியானாலும் விமர்சன ரீதியில் சிறப்பாக அமைந்தாரும் வர்த்தக ரீதியில் வெற்றியைப் பெறும் என்பது திரையுலகினரின் அவதானிப்பு. 

சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் வர்த்தக ரீதியில் பெரிய வெற்றியைப் பெற்றது.

அந்த வகையில் சூர்யா தற்போது நடித்திருக்கும் படம் என் ஜி கே. இதற்கு நந்த கோபால குமரன் என்ற இரண்டாவது லுக்கிற்கான போஸ்டர் மூலம் விளக்கம் கொடுத்து ரசிகர்களை உற்சாகமடையவைத்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

குறித்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது. அதற்காக இப்படத்தின் நிறைநிலை படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல்ப்ரீத் சிங், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.  சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

சூர்யாவின் ரசிகர்கள் நந்த கோபால குமரன் படத்தின் டீஸரை எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் செகண்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியாகியிருப்பதால் ஒரு சில தீவிர ரசிகர்கள் சற்று அதிருப்தியில் இருக்கிறார்கள். இருப்பினும் இளைய தலைமுறையைச் சேர்ந்த சூர்யாவின் ரசிகர்கள் இதனையும் கொண்டாடி வருகிறார்கள்.