யுத்தம் முடி­வ­டைந்து ஒன்­பது வரு­டங்கள் ஆகி­விட்­ட­போ­திலும்   வட­ப­கு­தியில் வர்த்­தக நட­வ­டிக்­கைகள்   வளர்ச்­சி­ய­டை­ய­வில்லை. யுத்­தத்­திற்குப் பின்னர்  புலம்­பெ­யர்ந்து சென்ற எமது மக்கள் இங்கு வந்து  நம்­பிக்­கை­யுடன் முத­லீ­டு­களை செய்ய  ஏற்­ற­ சூழல்  உரு­வாக்­கப்­ப­ட­வில்லை.   தெற்­கி­லி­ருந்து வந்து முத­லீ­டுகள்   நடை­பெ­ற­வேண்டும் என்­பதே அர­சாங்­கத்தின் குறிக்­கோ­ளாக உள்­ளது என்று  வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

போரின் பின்னர்    விசே­ட­மான கவ­னிப்­புக்கு உள்­ளாக்­கப்­ப­ட வேண்டிய  வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் தெற்கின் ஆக்­கி­ர­மிப்­புக்கே உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளன.  போரினால்  பாதிக்­கப்­பட்ட எமது பிர­தேசம்   கூடிய வரு­மா­னங்­களை  பெற­வேண்­டி­யி­ருக்கும். இந்த நேரத்தில் வளங்­களை   மத்­திய அர­சாங்கம்  எடுக்­கப்­பார்ப்­பதால் தான் நாங்கள்   சமஷ்­டியை கோரு­கின்றோம்.   அதி­கா­ரப்­ப­கிர்­வு­பற்றி கூறிக்­கொண்டு  மாகா­ணங்­களை  சுய­மாக  இயங்­க­வி­டாது மத்தி  தனது  கட்­டுப்­பாட்­டினுள்  வைத்­தி­ருக்க பார்ப்­பது நியா­ய­மா­ன­தல்ல என்றும்  முத­ல­மைச்சர் சுட்­டிக்­காட்­டினார். 

யாழ்ப்­பா­ணத்தில்  நேற்று முன்­தினம்   மாலை  இடம்­பெற்ற  புதிய தொழில் முனை­வோ­ருக்­கான கௌர­விப்பும்  விரு­து­வ­ழங்கும்     வைப­வத்தில்  கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே முத­ல­மைச்சர் இவ்­வாறு குறிப்­பிட்டார். 

யாழ்ப்­பாணம் வர்த்­தக  தொழில்­துறை மன்றம் மற்றும் தேசிய வர்த்­தக  அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை  ஆகி­யவற்றின் ஆத­ரவில் இந்த நிகழ்வு இடம்­பெற்­றது.  நிகழ்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்­சர்­க­ளான ரிஷாத் பதி­யுதீன், மங்­கள சம­ர­வீர ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர். 

இங்கு உரை­யாற்­றிய முத­ல­மைச்சர் மேலும் கூறி­ய­தா­வது;

வட­மா­கா­ணத்தைப் பொறுத்­த­வ­ரையில் கடந்த 30 ஆண்­டு­க­ளுக்கு மேலாக தொடர்ச்­சி­யாக யுத்தம் நடை­பெற்ற காலத்தில் கூட இப் பகு­தியின் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் மிகுந்த நெருக்­க­டி­களின் கீழும் ஒரு ஒழுங்­கான முறையில் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தன. அக் காலத்தில் அனைத்­துத்­தர வர்த்­தக முயற்­சி­களும் பல சிர­மங்­க­ளுக்கு மத்­தி­யிலும் சிறப்­பாக நடை­பெற்­றதை இத்­த­ரு­ணத்தில் பெரு­மை­யுடன் அறி­யத்­த­ரு­வதில் மகிழ்­வ­டை­கின்றேன். அத்­துடன் அக் காலத்தில் பெரிய, நடுத்­தர, சிறிய வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட வர்த்­த­கர்­க­ளி­னதும் மேலும் அனைத்­துத்­தர பொது மக்­க­ளி­னதும் கைகளில் பணப்­பு­ழக்கம் போது­மா­ன­தாக இருந்­தது. 

ஆனால் யுத்­த­நிலை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் அமை­தி­யான சூழ்­நி­லையில் கடந்த 9 வரு­டங்­களில் வட­ப­கு­தியின் வர்த்­தக நட­வ­டிக்கை என்ன வகையில் வளர்ச்­சி­ய­டைந்­தி­ருக்­கின்­றது என்­பது பற்றி ஆராய்­வோ­மானால் விடை வெறும் பூச்­சி­ய­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. தொடர்ச்­சி­யாக வட­ப­கு­தியின் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் பல பின்­ன­டை­வு­களை சந்­தித்த வண்­ணமே உள்­ளன. 

எமது உள்ளூர் வர்த்­த­கர்­களின் வர்த்­தக முயற்­சிகள் பல்­வேறு இர­க­சியக் கார­ணிகள் மூலம் முடக்­கப்­ப­டு­கின்­றன. இதை நான் வர்த்­த­கர்­க­ளுடன் பேசித் தெரிந்து கொண்டே வெளியி­டு­கின்றேன். 

முத­லா­வது இங்­கி­ருக்கும் வர்த்­த­கர்­களின் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் சிறப்­பாக நடை­பெ­ற­மு­டி­யாத வகையில் வட­மா­கா­ணத்­திற்கு வெளியே உள்ள வர்த்­த­கர்­களின் பாரி­ய­ள­வி­லான உள்­நு­ழை­வுகள் வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இரா­ணுவம் கூட உண­வகத் தொழிலில் ஈடு­பட்டு வரு­கின்­றது. 

யுத்­தத்­திற்குப் பின்னர் எமது புலம் பெயர்ந்த மக்கள் இங்கு வந்து நம்­பிக்­கை­யுடன் முத­லீ­டு­களைச் செய்ய ஏற்ற சூழல் இங்கு உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. தெற்கில் இருந்து வந்து முத­லீ­டுகள் நடை­பெற வேண்டும் என்­பதே அர­சாங்­கத்தின் குறிக்­கோ­ளாக இருக்­கின்­றது. வட­கி­ழக்கு மாகா­ணங்­களை பொரு­ளா­தார ரீதியில் தம்மை மிஞ்சி மேம்­பட விடக்­கூ­டாது என்ற எண்ணம் தெற்கில் உள்­ளதோ நான் அறியேன். முத­ல­மைச்சர் நிதியம் இன்று வரை முடக்­கப்­பட்­டி­ருப்­பதும் இவ்வாறு சிந்­திக்கத் தூண்­டு­கின்­றது.       

அடுத்து வட­மா­காண வர்த்­தக நட­வ­டிக்­கைகள் தொடர்­பான விட­யங்­களை கையாள்­வ­தற்கும் பிற விட­யங்­களை கவ­னிப்­ப­தற்­கு­மாக வட­மா­காண அமைச்சு அமைக்­கப்­பட்­டுள்ள போதும் எம் அமைச்சின் அதி­கா­ரங்­களை மீறி மத்­திய அரசின் அனு­ம­தி­யுடன் வட­ப­கு­தியில் பல வர்த்­தக முயற்­சிகள் பாரிய அளவில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இவை வட­மா­கா­ணத்தில் பல­கா­ல­மாக வர்த்­தக முயற்­சி­களில் ஈடு­பட்டு வந்த பெரிய, நடுத்­தர, சிறிய அள­வி­லான அனைத்து வர்த்­த­கர்­க­ளையும் பாதிப்­புக்­குள்­ளாக்­கி­யி­ருப்­பது கவ­லை­ய­ளிக்­கின்­றது. போரின் பின்னர் விசே­ட­மான கவ­னிப்­புக்கு உள்­ளாக்­கப்­பட வேண்­டிய வட­கி­ழக்கு மாகா­ணங்கள் தெற்கின் ஆக்­கி­ர­மிப்­புக்கே உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது. 

யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் இங்கு ஆரம்­பிக்­கப்­பட்ட பல நுண்­கடன் நிதி நிறு­வ­னங்­களின் பசப்பு வார்த்­தை­களில் ஏமாந்து அவர்­களின் இயல்­புக்கு மேற்­பட்ட வகையில் பாரிய கடன் தொகை­களை கட­னாகப் பெற்று அவற்றை மீளச் செலுத்த முடி­யா­மலும் அவற்றின் அதி­க­ரித்த வட்­டித்­தொ­கை­களைக் கட்ட முடி­யாத நிலை­யிலும் தமது சொத்­துக்கள் அனைத்­தையும் இழந்து கடு­மை­யான மன விரக்­திக்­குட்­பட்ட பல வர்த்­த­கர்­களின் செய்­திகள் பற்றி நாம் அறிந்­தி­ருக்­கின்றோம். 

ஏனைய பகு­தி­களில் இருந்து வரு­கை­தந்து இப் பகு­தி­களில் வர்த்­த­கங்­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் பற்றி எமக்கு ஆட்­சே­பனை இல்­லா­த­போதும் அவர்­களின் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் இங்­குள்ள ஒட்­டு­மொத்த வர்த்­த­கர்­களின் வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­ப­டுத்­தாத வகையில் அமை­யு­மாயின் அவ்­வா­றான வர்த்­த­கங்கள் வர­வேற்­கக்­கூ­டி­யன. தற்­போ­தைய நிலையில் இப்­ப­கு­தி­களில் உள்ள வர்த்­தக மூல வளங்கள் மற்றும் மனித வளங்கள் அனைத்தும் பிற தேவை­க­ளுக்­காக அதுவும் வட­ப­கு­திக்கு வெளியே­யான பகு­தி­களின் முன்­னேற்­ற­க­ர­மான நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது இப் பகு­தியின் வளர்ச்­சியை பின்­நோக்கித் தள்­ளு­வ­தான ஒரு நட­வ­டிக்­கை­யா­கவே நாம் பார்க்­கின்றோம். 

அண்­மையில் கொக்­கிளாய், கரு­வாட்­டுக்­கேணி போன்ற இடங்­களில் இல்­மனைட் அகழ்­வுகள் நடாத்­து­வது பற்றி எமக்குக் கூறப்­பட்­டது. புல்­மோடை இணைந்த வட­கி­ழக்கு மாகா­ணத்தின் கீழ் உள்­ள­டங்­கி­யி­ருந்தால் அது வேறு விடயம். இப்­போது வடக்கு மாகா­ணத்தில் இருந்து வளங்­களை வெளியே எடுத்துச் செல்ல எத்­த­னிக்­கின்­றீர்கள் என்று நான் கூறவும் எமது பிர­தே­சத்­திற்கு இதற்­கான ஒரு ஆலையைப் பெற்­றுத்­த­ரு­வ­தா­கவும் இங்­குள்­ள­வர்­களை அதில் வேலை செய்ய இட­ம­ளிக்கப் போவ­தா­கவும் கூறப்­பட்­டது. நான் இன்­னொரு வேண்­டு­தலை முன் வைத்தேன். ஒரு மாகா­ணத்தின் வளங்­களின் வரு­மா­னத்தின் பெரும் பகுதி திரும்­பவும் அதே மாகா­ணத்­திற்குக் கொண்­டு­வர வேண்டும் என்றேன். அந்த வரு­மா­னங்கள் மத்­திக்குக் கிடைக்கும் என்றும் மத்தி எல்­லோ­ருக்கும் பொது­வாக அவற்றைப் பாவிக்கும் என்று கூறப்­பட்­டது. போரினால் பாதிக்­கப்­பட்ட எமது பிர­தேசம் கூடிய வரு­மா­னங்­களைப் பெற வேண்­டி­யி­ருக்கும் இந்த நேரத்தில் வளங்­களை மத்­திய அர­சாங்கம் தான் எடுக்கப் பார்ப்­பதால் தான் நாங்கள் சமஷ்டி கேட்­கின்றோம் என்றேன். ஆகவே அதி­காரப் பகிர்வு பற்றிக் கூறிக்­கொண்டு மாகா­ணங்­களை சுய­மாக இயங்க விடாது மத்தி தனது கட்­டுப்­பாட்­டினுள் வைத்­தி­ருக்கப் பார்ப்­பது நியா­ய­மான ஒரு விடயம் அல்ல. 

எனவே தான் வட­ப­கு­தியின் உள்ளூர் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் சிறப்­பாக நடை­பெற இட­ம­ளிக்க வேண்டும் என்று அபிப்­பி­ரா­யப்­ப­டு­கின்றேன். எமது பகு­தி­களில் அமைந்­துள்ள நட்­சத்­திர ஹோட்டல்கள், பல்­பொருள் அங்­கா­டிகள், பாரிய உணவுக் களஞ்­சி­யங்கள் ஆகி­ய­வற்றின் செயற்­பா­டுகள் இப்­ப­கு­தியின் வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கு அமை­வா­கவே முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். இவ்­வாறு எமது நோக்­கங்­க­ளையுந் தேவை­க­ளையும் அறிந்து செயற்­பட்டால் எமது வர்த்­த­கர்­களும் நன்­மை­ய­டை­வார்கள். அதே நேரம் பிற பகு­தி­களில் இருந்து இங்கு வரு­கை­தந்து பாரிய வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­ப­வர்­களும் நன்மை அடை­வார்கள்.

எமது பிர­தே­சங்­களில் காணப்படும் மூல வளங்கள் முழுமையாக வடபகுதிக்கு வெளி யில் எடுத்துச் செல்லப்படுவது தொடர்பில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டிய நிலை இன்று அவதானிக்கப்பட்டுள்ளது. தெங்குப் பொருட்கள், கடல் வளங்கள் மற்றும் இன்னோரன்ன அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வகைதொகையின்றி இப் பகுதிகளில் இருந்து வெளியில் எடுத்துச் செல்லப்படுகின்றன. விளைவு இப் பகுதி யில் உள்ள மக்களுக்கு இந்த உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடுகள் ஏற்படுவதுடன் அவற்றை நாம் பெற 

அதிகூடிய பணச் செலவுகளும் ஏற்படுகின் றன. வளங்களின் வருமானம் தெற்கை வளம்படுத்துகின்றது. இதை முன்வைத்தே மாகாணங்களும் சுயாட்சி உரிமை பெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன். 

எனவே இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே வர்த்தக முயற்சிகள் முன்னெடுக் கப்பட வேண்டும். அத்துடன் இப் பகுதி யில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற வர்த்தக அபிவிருத்திகள் தொடர்பில் வட மாகாண சபையின் ஒத்திசைவுகளையும் பெற்றுக் கொண்டு முன்னேறிச் செல்வதே சிறப்பானது.