நுண்கடன் நிதி நிறுவனங்களின் வருடாந்த வட்டி வீதத்தினை 30 சதவீதமாக மட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் முல்லைத்தீவுக்கு சென்றிந்த நிதியமைச்சர் முல்லைத்தீவு மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் சுழற்சிமுறையிலான நுண்கடன் திட்டங்களை பெற்று அவற்றை செலுத்த முடியாமல் இருக்கின்ற பெண்களின் கடன்களை சுமார் ஒரு இலட்சம் ரூபாய் வட்டி பணத்தினை செலுத்தி அதிலிருந்து அவர்களை முழுமையாக விடுவிக்கும் வேலதை்திட்டத்தினையும் ஆரம்பித்து வைப்பதாக வாக்குறுதியளித்திருந்தார்.

இதன் பிரகாரமே இந்த புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்‍கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.